என் மலர்
முகப்பு » Vijayakarisalkulam Excavation
நீங்கள் தேடியது "Vijayakarisalkulam Excavation"
- விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- அகழாய்வில் இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
தாயில்பட்டி:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் ஏராளமான மண்பாண்ட பொருட்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட காதணிகள், சங்கு வளையல்கள், தங்க ஆபரணம், உருவ பொம்மைகள், சதுரங்க ஆட்ட காய்கள், வட்ட சில்லுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில் தற்போது கூடுதலாக மெருகேற்றும் கற்கள் கிடைத்துள்ளன. மெருகேற்றும் கற்களை சங்கு வளையல்கள் உள்பட ஆபரணங்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தி உள்ளனர் என அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.
×
X