என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vilages"

    • வில்லிபாளையம் கிராமத்தில் சிறப்பு நடமாடும் மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • பரமத்திவேலூர் கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வில்லிபாளையம் கிராமத்தில் சிறப்பு நடமாடும் மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள வில்லிபாளையம் கிராமத்தில் சிறப்பு நடமாடும் மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. முகாமில் விவசாயிகளிடமிருந்து மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை பெற்று பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி முகாமினை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

    நடப்பாண்டில் பரமத்தி வட்டாரத்தில் நல்லூர், இருட்டணை, வில்லிபாளையம், பிள்ளைகளத்தூர் ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் கட்ட முறையில் மண் மாதிரிகள் இறவைப்பாசன நிலங்களிலிருந்து 2.5 எக்டருக்கு ஒரு மண் மாதிரியும் மானாவாரி நிலங்களில் 10 ஏக்கருக்கு ஒரு மண்மாதிரியும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    ஆகவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்து அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாமக்கல் தரக்கட்டுப்பாடு, வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்திட வந்த விவசாயிகளுக்கு அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். முகாமில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மண் மற்றும் நீர் மாதிரிகளை வழங்கி ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை அன்றைய தினமே பெற்றனர்.

    விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மண் மற்றும் நீர் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் சவுந்தர்ராஜன், அன்புசெல்வி, அருள்ராணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஜெயமணி ஆகியோர் ஆய்வு செய்து அதன் முடிவுகளை மண்வள அட்டையாக வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதி செய்திருந்தனர்.

    ×