என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village Assistant Exam"

    • கலெக்டர் ஆய்வு
    • 1,070 பேர் எழுதினர்

    ஆற்காடு:

    ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று கிராம உதவியாளருக்கான எழுத்து தேர்வில் 1070பேர் எழுதினர். இந்த தேர்வு மையத்தை ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேர்வு நடைபெற்ற அனைத்து அறைகளையும் பார்வையிட்டார்.

    அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஆற்காடு தாசில்தார் சுரேஷ், தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜலட்சுமி, மண்டல துணை தாசில்தார் பாலாஜி, வருவாய் ஆய்வாளர் பாரதி, வி.ஏ.ஓ.சக்கரவர்த்தி மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

    • திருப்பத்தூர் கோட்டாட்சியர் ஆய்வு
    • அதிகாரிகள் உடன் இருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் இன்று நடைபெறும் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு மையங்களை திருப்பத்தூர் கோட்டாட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்ட நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கிராம உதவியாளர் தேர்வு நடைபெறுயுள்ளது இதனையடுத்து நேற்று தேர்வு நடைபெறும் மையங்களை திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஷ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சித்ரா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை பிரிவு சேர்ந்த அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×