search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "villagers regarding"

    • புதிதாக கல்குவாரி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் டி.என்.பாளையத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
    • கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கோவிலூர், வினோபாநகர் கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டன்பாளையம் வனப்பகுதியையொட்டிய பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் புதிதாக கல்குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு இருந்தார்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    கோபி தாசில்தார் ஆசியா, மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறியாளர் உதயகுமார், சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் புதிதாக அமைய உள்ள கல்குவாரி பற்றிய விபரங்களை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

    இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கல்குவாரி அமைத்தால் நிலநடுக்கம் ஏற்படும், புலிகள் காப்பகம் என்பதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் மற்றும் அணை பகுதிகள் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஊராட்சி மன்றம் மற்றும் பொதுமக்கள் சிலர் கல்குவாரி அமைக்க ஆதரவும் தெரிவித்தனர். முடிவில் அதிகாரிகள் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறினர்.

    குண்டேரிப்பள்ளம் பாசன விவசாயிகள் உள்பட கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கோவிலூர், வினோபாநகர் கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×