என் மலர்
நீங்கள் தேடியது "villages cut off"
- இடியும் நிலையில் இருக்கும் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- புதிய பாலம் கட்டும் பணி மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே திருமூலஸ்தானம் மற்றும் இடையார் பகுதிகளை இணைக்கும் வகையில் ராஜன் வாய்க்கால் மீது மிகவும் பழமையான பாலம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்த பாலத்தின் வழியாக இடையார், பிள்ளையார்தாங்கல், அதங்குடி, ஆழங்காத்தான், வாண்டியார்இருப்பு, புளியங்குடி, வெள்ளூர், வெச்சூர், வெண்ணையார் போன்ற 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு வந்து செல்லவேண்டும். இடியும் நிலையில் இருக்கும் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதியபாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டுமான பணி துவங்கப்பட்டது. பழைய பாலத்தை இடிப்பதற்கு முன்பாக இப்பகுதி மக்கள் காட்டுமன்னார்கோவிலுக்கும் செல்ல தற்காலிக தரைப்பாலம் வாய்க்காலில் அமைக்கப்பட்டது. இந்த தற்காலிக தரைப்பாலத்தின் வழியாகத்தான் மேற்சொன்ன கிராமங்ளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காட்டுமன்னா ர்கோவிலுக்கு கல்வி பயில வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கும் இவ்வழியாகத்தான் இப்பகுதி மக்கள் வரவேண்டும். புதிய பாலம் கட்டும் பணி மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்காலிக தரைப்பாலம் இன்று காலை உடைந்துவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் 3-வது முறையாக தற்காலிக தரைப்பாலம் உடைந்தது. இதனால் மேற்சொன்ன 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காட்டுமன்னார்கோவில் செல்லவேண்டும் என்றால் சுமார் 15 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும். இதனால் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதியுற்றனர். தரமற்ற முறையில் தற்காலிக பாலம் அமைப்பதால் தான் அடிக்கடி உடைவதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் புதிய பாலத்தை கட்டி வரும் ஒப்பந்ததாரரை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தற்காலிக தரைப்பாலத்தை தரமாக அமைத்து தரவேண்டும். புதிய பாலத்தை விரைந்து கட்டவேண்டுமென பொதுமக்கள் ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு புதிய பாலம் கட்டும் பணியினை துரிதப்படுத்த வேண்டும். அதுவரை மாணவர்கள், தொழிலா ளர்கள், நோயாளிகள் காட்டுமன்னார்கோவில் சென்று வர தற்காலிக தரைப்பாலத்தை தரமாக அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.