என் மலர்
நீங்கள் தேடியது "Virudhachalam"
- பழனிமுத்து மற்றும் அவரின் தாய் தெய்வ நாயகி வீட்டின் முன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் நகரம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மகன்கள் செல்வகுமார் (வயது 33) மற்றும் சேகர்(30) இவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று சகோதரர்கள் 2 பேருக்கும் மீண்டும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது.
இதனைக் கண்ட அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பழனிமுத்து (38) என்பவர் சண்டையை விலக்க முற்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சகோதரர்கள் பழனிமுத்துவிடம் எங்களது குடும்ப சண்டையில் தலையிட நீ யார்? என்று கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இருவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணி அளவில் சண்டையை விலக்க சென்ற முத்துவின் வீட்டின் முற்பகுதியில் மர்ம நபர்கள் அதிகாலை மண்ணெண்ணை நிரப்பிய 2 பாட்டில்களில் தீ வைத்து பழனிமுத்துவின் வீட்டின் முன்பு வீசியுள்ளனர்.
இதில், வீட்டின் முன்புறம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இந்நிலையில் வெடி சத்தம் கேட்டு வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த வீட்டின் உள் பகுதியில் படுத்திருந்த பழனிமுத்து மற்றும் அவரின் தாய் தெய்வ நாயகி வீட்டின் முன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொழுந்து விட்டு எறிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து விருத்தாசலம் அனைத்துமகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெ க்டர் சிவகாமி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்ணெண்ணை குண்டு வீசிய இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் சென்றதால் விபத்து
- வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கடலூர்:
விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள அரிசி கடைக்கு சுமார் 50 டன் அரிசி லாரி ஏற்றி வந்தது. அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் சென்றதால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது ஏறி வாகனங்கள் நொறுங்கியது.
அப்போது வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் ஊராட்சி புதிய காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் இருந்து மினிகுடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பழுதானது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மினிகுடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக இருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள், ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதன் பேரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 வாரமாக இப்பகுதி மக்களுக்கு செம்மண் கலந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஆழ்துளை கிணற்றை முறையாக பராமரிக்காததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அருகில் உள்ள விளை நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் அலைந்து திரிகின்றனர். அதனால் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அம்புஜவல்லிபேட்டையில், இரண்டு குடும்பத்தினருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு இன்று சிகிச்சைக்காக வந்தனர்.
அப்போது, இரு தரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதனால் பயந்துபோன மற்ற நோயாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் போலீசார் வந்து இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தினர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #VirudhachalamClash
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த எடக்குப்பம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி லெனின் தலைமையினான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 12 மூட்டைகள் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். உடன் லெனின் தலைமையிலான அதிகாரிகள் அந்த ஆட்டோவை குட்கா மூட்டைகளுடன் பறிமுதல் செய்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். தாசில்தார் கவியரசு அதிகாரி லெனினிடம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
உடன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விருத்தாசலம் போலீசார் பறிமுதல் செய்த இடம் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிக்கு அப்பாற்பட்ட இடம் எனக் கூறினார்கள். இதனால் நிலையான கண்காணிப்புக்குழு ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் விளாங்காட்டூர் தாமோதரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். #Gutkhaseized #LSPolls
விருத்தாசலம்:
விருத்தாச்சலம் பாலக்கரையில் கரும்புக்கான நிலுவை தொகை வழங்க கோருதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 -ந் தேதியிலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் விருத்தாசலம் பாலக்கரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருத்தாச்சலம் சப்கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு ஆகியோர் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் போராட்டத்தை தொடருவோம் என்றனர். அதன்படி இன்று காலை விவசாயிகள் மண்டையோடு மற்றும் மனித எலும்புகளையும் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தனியரசு தலைமை தாங்கினார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் பதவி உயர்வு கேட்டும் ஊதிய உயர்வு கேட்டும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் நாங்கள் இருபத்தி மூன்று மாதங்களுக்கு முன்பு எங்களுடைய கரும்புகளை வெட்டி சித்தூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பினோம். ஆனால் அந்த கரும்பிற்கான பணத்தை கேட்டு போராட வேண்டிய ஒரு அவல நிலையில் இன்று போராடி வருகிறோம். ஆனால் அந்த பணத்தை சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகம் தர மறுக்கிறது.
தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பம் அடுத்த தெற்குவெள்ளூரை சேர்ந்தவர் வேல்முருகன். விருத்தாசலம் பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த வேல்முருகன், தலைமறைவானார்.
15 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள வேல்முருகனை கைது செய்யுமாறு, விருத்தாசலம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான தனிப்படைபோலீசார், தஞ்சாவூர் மாவட்டம், கரிகாடு பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த வேல்முருகனை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40) டெய்லர் . இவரது மனைவி புவனேஷ்வரி(34). இவர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவரை பணியில் இருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் புவனேஷ்வரி மன வேதனை அடைந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். மயங்கி நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தீவிர சிகிச்சையில் இருந்தப்போது புவனேஷ்வரி கூறியதாவது,
ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தப் போது நோயாளியுடன் வந்த அட்டண்டர் ஒருவர் கொடுத்த டீயை குடித்ததற்காக பணியில் இருந்து நீக்கி விட்டார்கள். மன்னிப்புக் கடிதம் கொடுத்தும் அதனை பொருட்படுத்தாமல் நீக்கியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. என்னை நீக்கி விட்டு வேறு ஒருவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்துள்ளார்கள். என்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் கூறினேன்.
இது குறித்து தனியார் ஒப்பந்த நிறுவன சூப்ரவைசரிடம் கேட்டதற்கு, புவனேஷ்வரி மீது லஞ்ச புகார் வந்ததால் தான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 20). கூலி தொழிலாளி.
அதே தெருவில் அவரது மாமா சக்திவேல் வசித்து வருகிறார். இவரது மனைவி பொன்னி (30). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக்திவேல் வெளிநாடு சென்று விட்டார்.
இன்று காலை அன்பரசன் தனது மாமா சக்திவேல் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த மோட்டார் சைக்கிளை அன்பரசன் எடுக்க முயன்றார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த பொன்னி மோட்டார் சைக்கிளை எடுக்கக்கூடாது என்றார்.
இதைத்தொடர்ந்து அன்பரசனுக்கும், பொன்னிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பொன்னி சமையலறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து அன்பரசனின் முதுகில் குத்தினார். பின்னர் அந்த கத்தியை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
கத்தி குத்தில் காயம் அடைந்த அன்பரசன் கூச்சல் போட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ரத்தம் சொட்ட சொட்ட அன்பரசனை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவர் முதுகின் விலா எலும்பில் குத்தி இருந்த கத்தியை எடுக்க முடியாமல் திணறினர். கத்திய அகற்ற ஆஸ்பத்திரியில் போதிய உபகரணங்கள் இல்லை.
இதனை தொடர்ந்து அன்பரசனை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் மூலம் அந்த கத்தியை அகற்ற முயற்சி நடந்து வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சு.கீணனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 40).
இவரது மகள் மகாலட்சுமி(13) இவர் கம்மாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை 8.30 மணியளவில் மகாலட்சுமி பள்ளிக்கூடத்துக்கு சென்றார். அங்குள்ள பள்ளி வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அங்கு இருந்த மற்ற சக மாணவ-மாணவிகள் அவரை மீட்டு கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த நர்சு, மகாலட்சுமியின் உடலை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினார்.
மகாலட்சுமி இறந்த தகவல் அவரது பெற்றோருக்கும், உறவினருக்கும் தெரியவந்தது. அவர்கள் அலறியடித்துக்கொண்டு கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திரண்டு வந்தனர். மகாலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாததால் மாணவி மகாலட்சுமி இறந்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். பின்னர் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே மாணவி இறந்ததை தொடர்ந்து அவருடன் படித்து வந்த மாணவ, மாணவிகள் விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ராஜாதாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தினர்.
இந்தசம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த நகர் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அசானா(வயது 20). இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை அசானா வழக்கம்போல் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கு பஸ்சில் வந்தார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி வேலை பார்க்கும் இடத்திற்கு தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். சரோஜினி நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்களின் பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை அந்த பகுதியில் நிறுத்தினார்.
பின்னர் அவர் அசானாவை பின்தொடர்ந்து சென்றார். அந்த மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து திடீரென அசானாவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. அசானாவின் தோழி காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். அவர்களை கண்டதும் அந்த மர்மநபர் மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் படுகாயமடைந்த அசானாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அசானாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அசானா கூறியதாவது:-
எனக்கும், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கொங்குராயப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அந்த வாலிபரை எனக்கு பிடிக்கவில்லை என கூறிவிட்டேன். ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன்.
இந்தநிலையில் என்னை மர்மநபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதற்கும் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய வாலிபருக்கும் தொடர்பு உள்ளது என சந்தேகிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews