என் மலர்
நீங்கள் தேடியது "virumandi abirami"
- அறிமுக இயக்குனர் யூடுயூப் புகழ் ராஜ்மோகனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “பாபா பிளாக் ஷீப்”.
- இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அறிமுக இயக்குனர் யூடுயூப் புகழ் ராஜ்மோகனின் இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் "பாபா பிளாக் ஷீப்". நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றிகிறார் விருமாண்டி படத்தின் மிகவும் பிரபலமடைந்த நடிகை அபிராமி. இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு திரைக்கதையாக, "பாபா பிளாக் ஷீப்" உருவாகி வருகிறது.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் "பாபா பிளாக் ஷீப்" படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் புதுமுகங்களை, முன்னணி திரைப்பிரபலங்கள், மேடையில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், ஓபேலி கிருஷ்ணா, நடிகர்கள் இளவரசு, மணிகண்டன், பஞ்சு சுப்பு, தர்ஷன், ரியோ, நடிகை வாணி போஜன், ஈரோடு மகேஷ், சாய்ராம் நிறுவனத்தின் சாய்பிரகாஷ், சுட்டி அரவிந்த் உள்ளிட்ட திரைப்பிரலங்கள் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களையும் தனித்தனியே ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
- அறிமுக இயக்குனர் யூடுயூப் புகழ் ராஜ்மோகனின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக் ஷீப்”.
- இப்படம் பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வருகிறது.
அறிமுக இயக்குனர் யூடுயூப் புகழ் ராஜ்மோகனின் இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் "பாபா பிளாக் ஷீப்". நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றிகிறார் விருமாண்டி படத்தின் மிகவும் பிரபலமடைந்த நடிகை அபிராமி. இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு திரைக்கதையாக, "பாபா பிளாக் ஷீப்" உருவாகி வருகிறது.
இப்படம் குறித்து இயக்குனர் ராஜ்மோகன் கூறியதாவது, "பாபா பிளாக் ஷீப்" பள்ளிக்குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிராமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது. இப்பாத்திரத்திற்காக நடிகை அபிராமி அவர்களை அணுகினேன், கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன் என்றார். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார்.
மிகவும் உணரச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் கண்கலங்கி எழுந்து கை தட்டியது. அந்த காட்சியை ரசிகர்கள் திரையில் பார்க்கும் போது, கண்டிப்பாக அவர்களும் கண்கலங்குவார்கள். இப்படம் நடிகை அபிராமிக்கு மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தில் மதுரை முத்து, ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் போன்ற பல முன்னணி நடிகர்கள் அட்டாகாசப்படுத்தியுள்ளார்கள். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது விரைவில் டீசரோடு சந்திக்கிறேன் என்றார்.