என் மலர்
நீங்கள் தேடியது "VSR Jegadheesh"
- கடந்த 11-ந் தேதி முதல் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- ரொசிங்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
மேலும் தினமும் பல்வேறு வகையான போராட்டங்களையும் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று 19 -வது நாளாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் போராட்டக்குழு தலைவர் ரொசிங்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாலையில் போராட்ட பந்தலில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. மாநில மீனவர் அணிசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பங்குதந்தை வில்லியம் வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கூறியதாவது:-
கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க சபாநாயகர் அப்பாவு தீவிர முயற்சி செய்துவருகிறார். சென்னை யில் மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து தூண்டில் வளைவு அமைப்பதற்கான முயற்சி களை செய்துவருகிறார்.
நாளை (வெள்ளிக் கிழமை) அதற்கான ஆணை பெற்று விடுவதாக உறுதியளித்துள்ளார். 3 மாதத்திற்குள் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது.