என் மலர்
நீங்கள் தேடியது "VSR Scholl"
- தங்களிடம் இருப்பதைக் கொண்டு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை குறுநாடகம் மூலம் மாணவர்கள் நடித்துக் காட்டினர்
- நம்மை நாமே மகிழ்வுடன் வைத்திருக்க பழக வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறினர்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. 9-ம் வகுப்பு மாணவர்கள் காலை வழிபாடு நடத்தினர். சிறப்பு நிகழ்ச்சியாக மாணவர்கள் தங்களிடம் இருப்பதைக் கொண்டு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை குறுநாடகம் மூலம் நடித்துக் காட்டினர். வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மகிழ்ச்சி என்பது வெளியில் இருந்து கிடைப்பதல்ல. நாமே எல்லாவற்றையும் நேர்மறையான சிந்தனையுடன் எதிர்கொண்டு நம்மை நாமே மகிழ்வுடன் வைத்திருக்க பழக வேண்டும் என்று கூறினர்.
மேலும் பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் பேசும் போது, மகிழ்ச்சி என்பது பிறரிடம் இருந்து கிடைப்பதல்ல நமக்கு வரும் சூழல்களை நாமே எளிதாக எதிர்கொண்டு நம் உள்ளத்தை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொண்டு பிறரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.