search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wage rate"

    இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதிய விகிதம் அளிக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு குமலன்குட்டை தொடக்க பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் ப.சரவணன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி செயலாளர் மார்க்ரெட் சில்லியா கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதிய விகிதம் (7-வது ஊதியக்குழு) அளிக்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை முறைபடுத்த வேண்டும்.

    ஓய்வூதியம் செய்ய ஏற்படுத்திய குழுவின் காலத்தை நீடிக்காமல் உடனடியாக அறிக்கை பெற்று உரிய முறைப்படுத்தி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    ×