search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "was killed"

    • பெருந்துறை சிப்காட்டில் தொழிலாளர்கள் கியாஸ் நிரப்பி கொண்டிருந்தனர்.
    • அப்போது சரவணன் முகம் மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வர் ராஜு. இவரது மகன் சரவணன் (வயது 22). இவர் பெருந்துறை, கோவை மெயின் ரோடு, சின்ன மடத்துப்பாளையம் பகுதியில் தங்கி இருந்தார்.

    பி.காம். பட்டதாரியான இவர் கடந்த 1½ வருடங்க ளாக பெருந்துறை சிப்காட்டில் உள்ள இந்தியன் ஆயில் கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் நிரப்பும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் பெருந்துறை சிப்காட்டில் தொழிலாளர்கள் கியாஸ் நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது.

    இதையடுத்து அருகே இருந்த அவரது உறவினர் அருள் மற்றும் சக தொழிலாளிகள் ஜெகன், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது சரவணன் அங்கு முகம் மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு கார் மூலம் பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சரவ ணனை பரிசோதனை செய்தனர். இதில் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடு த்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் சரவணன் 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் நிரப்பி கொண்டு இருந்தபோது சிலிண்டரின் அடிப்பாகம் கழன்று அழுத்தம் ஏற்பட்டு சிலிண்டர் சரவணனின் நெஞ்சு மற்றும் உடல் பகுதியில் அடித்து அவரை தூக்கி வீசியதும். இதில் படுகாயம் அடைந்து இறந்த தும் தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • வெண்டிபாளையம் அருகே ரெயில் தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    காவிரியில் இருந்து ஈரோடு வரும் ரெயில் பாதையில் வெண்டிபாளையம் அருகே ரெயில் தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ரயில்வே போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை.

    கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது அவ்வழியே வந்த ரெயில் மோதி சம்பவ இடத்தில் இறந்தது தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள சிந்தகவுண்டம்பாளையம் அடுத்த காட்டுபாளையம் ஏரி தோட்டத்தை சேர்ந்தவர் சொக்கப்பன். இவரது மகன் கார்த்தி ( 19). டிப்ளமோ படித்துள்ளார்.

    இந்த நிலையில் கார்த்தி சம்பவத்தன்று அந்தியூர் அருகே உள்ள பாட்டப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் சின்னபருவாச்சியில் அந்தியூர்-பவானி ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த கார்த்தியை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கார்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

    ×