என் மலர்
நீங்கள் தேடியது "washington"
- வீடுகளில் அறைகளை குளிரூட்ட ஏர் கண்டிஷனர்கள் அவசியமான சாதனமாகி விட்டது
- இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது
இவ்வருடம் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களால் பூமியில் ஒரு சில இடங்களில் அதிக வெள்ளம், மழை போன்ற இயற்கை பேரிடர் தோன்றியது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக அதிக வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் அங்கெல்லாம் வீடுகளில் அறைகளை குளிரூட்ட ஏர் கண்டிஷனர்கள் அவசியமான சாதனமாகி விட்டது.
இச்சாதனங்களின் உதவியால் வெப்பம் சார்ந்த உடல் ஆரோக்கிய குறைபாடுகள் குறைவது மட்டுமின்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் இது குறைக்கிறது. உயிர் வாழ்வதற்கே இவை அவசியமான கருவிகளாக மாறி விட்டன.
ஆனால் ஏர் கண்டிஷனர்கள் அதிக மின் சக்தி தேவைப்படும் சாதனங்கள். இதனால் இவற்றின் அதிக பயன்பாடு பருவநிலை நெருக்கடிக்கு (climate crisis) ஒரு காரணமாக அமைகிறது.
சர்வதேச ஆற்றல் ஏஜென்சி அளிக்கும் தகவல்களின்படி, உலகம் முழுவதும் வெளியிடப்படும் 37 பில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு அளவில், சுமார் 1 பில்லியன் மெட்ரிக் டன் அளவு வெளியேற்றத்திற்கு ஏர் கண்டிஷனிங் சாதனங்களே காரணமாகிறது. இதன் மூலம் மீண்டும் காற்றில் அதிக வெப்பம் உருவாகும். இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது.
2050 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஏர் கண்டிஷனர்கள் பொருத்தப்பட்ட குடும்பங்களின் விகிதம் 10% முதல் 40% வரை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏர் கண்டிஷனர்கள் பொதுவாக ஃப்ளோரோகார்பன் வாயுக்களை அதன் இயக்கத்திற்காக பயன்படுத்துகின்றன. அந்த வாயு வளிமண்டலத்தில் கலக்கும்.
எனவே, கரியமில வாயு வெளியேறுவதால் வரும் வெப்பமயமாதலை விட, இந்த வாயுவால் ஆயிரக்கணக்கான மடங்கு அதிக வெப்பமயமாதல் நிகழ வாய்ப்புண்டு.
மேலும், மின்சாரக் கட்டணத்தின் விலை ஏறும் போது இவற்றின் பயன்பாடு குடும்பங்களின் அத்தியாவசிய தேவைகளை மாற்றியமைக்கலாம்.
புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி வழிகளை அதிகரிப்பதன் மூலமும், குறைந்த ஆற்றல் கொண்ட ஏர் கண்டிஷனர்களை உருவாக்குவதன் மூலமும், மற்றும் இதர குளிரூட்டும் தொழில்நுட்பங்களை பெருக்குவதன் மூலமும், இந்த தீய சுழற்சியை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்தது.
- கமலா ஹாரிசுக்கு நன்கொடை குவிந்து வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடன், தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் துணை அதிபர் கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக்க தனது ஆதரவை தெரிவித்தார்.
கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்தது. அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான பிரதிநிதிகள் ஆதரவு எண்ணிக்கையை பெற்றார்.
இதன்மூலம் அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து கமலா ஹாரிசுக்கு நன்கொடை குவிந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து புதிய கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2 சதவீதம் அதிகமான புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதாக ராய்ட் டர்ஸ்-இப்சோஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவை பெற்று உள்ளார். டிரம்புக்கு 42 சதவீத ஆதரவு உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டால் டிரம்புக்கு எதிராக அவருக்கு ஆதரவு எவ்வளவு இருக்கும் என்று கருத்துக்கணிப்பு நடத்தப் பட்டதில் இருவரும் சம நிலையுடன் இருந்தனர்.
தற்போது கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகி உள்ள நிலையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் டிரம்பை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
அதேபோல் டிரம்பிற்கு எதிரான போட்டியில் ஜோபைடன் 2 புள்ளி குறைவாக இருந்தார். ஆனால் தற்போது கமலா ஹாரிஸ் உடன் ஒப்பிடும் போது டிரம்ப் 2 புள்ளிகள் குறைவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டிரம்புக்கு கடும் சவால் அளிக்கக்கூடிய போட்டியாளராக கமலா ஹாரிஸ் உள்ளார்.
- ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
- உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கடந்த 17-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறி தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் டெலாவேரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து ஜோபைடன் குணமடைந்தார். இதுகுறித்து அவரது டாக்டர் கெவின் ஓ கானர் கூறும்போது, அதிபர் ஜோபைடனுக்கு ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது.
அவர் தனது நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். அவருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றார்.
இதையடுத்து ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அப்போது அவர் கூறும்போது, நான் நன்றாக உணர்கிறேன் என்று தெரிவித்தார்.
- ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
- விபத்து குறித்த தகவல்கள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் விச்சிட்டாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று தலைநகர் வாஷிங்டனில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.
அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான அந்த விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் என 64 பேர் இருந்தனர். விமானம் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தது. விமானம் போடோமேக் நதியின் மேல் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவத்தின் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர் அருகே பறந்து கொண் டிருந்தது.
அப்போது ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீப்பிழம்பு ஏற்பட்டு பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அமெரிக்க பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்புப் படையினர் ஆற்றில் தேடுதல் பணியை தொடங்கினர்.
படகுகளில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட னர். நீச்சல் வீரர்களும் ஆற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆம்புலனஸ்சுகள், மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 64 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
விபத்தை தொடர்ந்து ரீகன் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கு அனைத்து விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல்களை நிறுத்தி வைத்துள்ளதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.
விபத்து குறித்த தகவல்கள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, விமான விபத்து குறித்து எனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை கண்காணித்து வருகிறேன் என்றார்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டருடன் விமானம் நடுவானில் மோதி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யும் நிர்மலா, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானில் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் என் மாட்டிஸ்-ஐ சந்தித்துப் பேசுகிறார்.
அமெரிக்காவாழ் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.
சமீபத்தில் மரணம் அடைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்(94) உடலுக்கு மலர் வளையம் வைத்து இந்தியாவின் சார்பில் அவர் அஞ்சலி செலுத்துகிறார். #NirmalaSitharaman #JamesNMattis #Pentagon
அமெரிக்காவில் ஏற்கனவே 19 மாநிலங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வாஷிங்டனிலும் அந்த தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசார இயக்கம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கு மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மரண தண்டனைக்கு எதிராக பிரசார இயக்கம் மேற்கொண்டவர்கள் இதனை வரவேற்றுள்ளனர். இந்த தண்டனை ஒழிக்கப்பட்டதன் மூலம் மரணத்தை எதிர்நோக்கி இருந்த 8 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 23 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் வாஷிங்டன் மாகாணத்தில் 2010-ம் ஆண்டில் இருந்து இதுவரை யாருக்கும் அந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
அமெரிக்காவில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டதில் வாஷிங்டன் 20-வது மாநிலம் ஆகும். #DeathPenalty
