search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 நாள் பயணமாக வாஷிங்டன் வந்தார் நிர்மலா சீதாராமன் - அமெரிக்க ராணுவ மந்திரியுடன் சந்திப்பு
    X

    5 நாள் பயணமாக வாஷிங்டன் வந்தார் நிர்மலா சீதாராமன் - அமெரிக்க ராணுவ மந்திரியுடன் சந்திப்பு

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக வாஷிங்டன் வந்துள்ளார். அமெரிக்க ராணுவ மந்திரியுடன் இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #NirmalaSitharaman #JamesNMattis #Pentagon
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வாஷிங்டன் வந்தடைந்தார்.



    வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யும் நிர்மலா, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானில் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் என் மாட்டிஸ்-ஐ சந்தித்துப் பேசுகிறார்.

    அமெரிக்காவாழ் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.

    சமீபத்தில் மரணம் அடைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்(94) உடலுக்கு மலர் வளையம் வைத்து இந்தியாவின் சார்பில் அவர் அஞ்சலி செலுத்துகிறார். #NirmalaSitharaman #JamesNMattis #Pentagon
    Next Story
    ×