என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "water from Bhavanisagar Dam"
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.05 அடியாக உள்ளது.
- பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வதும் பின்னர் மழை பொலிவு இல்லாததுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
இதனால் அணைக்கு ஒருநாள் நீர்வரத்து அதிகரித்தும், ஒரு நாள் நீர்வரத்து குறைந்தும் வருகிறது. இதனால் பவானிசாகர் அணை தொடர்ந்து 104 அடியில் நீடித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,743 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
அனைத்து வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஆனால் அதே சமயம் மற்ற பிரதான அணைகளான குண்டேரிபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 41.75 அடியிலும், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 30.84 அடியிலும்,
வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது.
- அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2700 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 300 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்