search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Metro ride"

    • இந்தியாவிலேயே முதல் முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் கேரளாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் முக்கிய இடம் என்பதால், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கொச்சியில் துறைமுகம், விமான நிலையம் உள்ளது.

    இதற்கிடையே, இந்தியாவிலேயே முதல் முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் (சுற்றுலா படகு போக்குவரத்து) கேரளாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்குச் சென்று கண்டு ரசிக்கலாம்.

    தரைவழியில் மட்டும் இருந்த மெட்ரோ திட்டம் கடல் வழியிலும் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.

    ஒரு படகில் 100 பேர் பயணம் மேற்கொள்ளலாம். குறைந்த கட்டணம் ரூ.20, அதிக கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 78 கி.மீ. சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்பட இருக்கிறது.

    வந்தே பாரத் ரெயிலில் உள்ளவாறு, கழிப்பிடம், உணவு, குளிர்சாதன வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் வாட்டர் மெட்ரோ திட்ட படகுகளிலும் உள்ளது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கொச்சியில் இருந்து வாட்டர் மெட்ரோவில் பயணம் செய்து மகிழ்ந்தார் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் பதிவிட்டு தெரிவித்துள்ளது.



    ×