search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "We are a Tamil party"

    • மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள்.
    • காளியம்மாளின் அதிரடி பேச்சுக்கள் அரசியல் களத்தில் எல்லோராலும் கவனிக்கப்படும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். சமூக செயற்பாட்டாளராக இருந்தவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    கடந்த 6 மாதமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    கனத்த இதயத்துடன் வெளியேறியதாக கூறியவர் அடுத்த கட்டம் என்ன என்பது பற்றி எதுவும் தெரிவிக்க வில்லை.

    காளியம்மாளின் அரசியல் அதிரடி பேச்சுக்கள் அரசியல் களத்தில் எல்லோராலும் கவனிக்கப்படும்.

    எனவே அவரை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய மூன்று கட்சிகளும் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

    விரைவில் ஏதாவது ஒரு கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில் காளியம்மாளின் கருத்தை அறிவதற்காக பலரும் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர் தனது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார்.

    • மடத்துக்குளம் பகுதி மூத்த தமிழ்தேசியவாதியான கதிர்வேல் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.
    • அதைத்தொடர்ந்து மாத கலந்தாய்வு கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும், முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை யும் செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். மடத்துக்குளம் பகுதி மூத்த தமிழ்தேசியவாதியான கதிர்வேல் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி, தலைவர் ஈசுவரசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, இணை செயலாளர் நாகமாணிக்கம், துணை தலைவர் விஜயகுமார், மகளிர் பாசறை செயலாளர் ரீத்தாமேரி, மடத்துக்குளம் ஒன்றிய பொருப்பாளர்கள் தியாகராஜன் மற்றும் சிவநாதன், மடத்துக்குளம் பேரூராட்சி பொருப்பாளர்கள் பாலசுப்ரமணியம், வடிவேல் மற்றும் ரப்ரீக் ராசா, சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, செய்தி தொடர்பாளர் சிலம்பரசன், தளி பேரூராட்சி செயலாளர் சரவணக்குமார், பொருளாளர் சுரேஷ், துணை தலைவர் சிவக்குமார் உட்பட 30க்கும்‌ மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து மாத கலந்தாய்வு கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது.

    ×