என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weather"

    • கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது.
    • தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

    வேதாரண்யம்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் உள்பகுதிகளில் இன்று வழக்கத்தை விட அதிகளவில் பலத்த காற்று வீசி வருகிறது.

    இதனால் ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 5000 மீனவர்கள் இன்று மீன் பிடிக்கச் கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்து வளரும்போதுதான் எதிர்பார்க்கப்படுகின்ற துல்லியத்தன்மை கிடைக்கும்.
    • தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மட்டுமே வானிலை நிகழ்வுகளை கணித்துவிட முடியாது.

    சென்னை:

    சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் கணிப்பில் வானிலை ஆய்வு மையம் சற்று தடுமாறியது. இதுபோன்று வானிலை நிகழ்வுகளை சரியாக கணிக்க முடியாமல் போவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வானிலையியலை முழுமையாக அறிந்து கொள்ள அறிவியல் கிடையாது. 100 சதவீதம் முழுமையாக கணிக்க முடியாது. வானிலை நிகழ்வுகள் பல காரணங்களால் நிகழக்கூடியது. வானிலையை கணிப்பதற்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது. கருவிகள் புள்ளிவிவரங்களைதான் கொடுக்கும். அதனை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அறிவியல் வளரும் போது தொழில்நுட்பமும் வளரவேண்டியது அவசியம்தான். அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்து வளரும்போதுதான் எதிர்பார்க்கப்படுகின்ற துல்லியத்தன்மை கிடைக்கும்.

    புயலை பொறுத்தவரையில், கடல் உள்ளடக்க வெப்பம், கீழ் பகுதியில் காற்று குவிதல், மேல் பகுதியில் காற்று விரிதல், காற்றுக்கும், வளிமண்டலத்துக்கும் உள்ள தொடர்பு, மேகக்கூட்டங்கள் எப்படி உருவாகிறது?, அதனால் என்ன வெப்பம் வெளியாகிறது?, புயலின் நகர்வு வேகம் போன்ற பல காரணிகளால் அறியப்பட்டு இருக்கின்றன. ஆனால் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது.

    புயல் உருவாகாதபோது காற்று நேர் திசையில் செல்லும். புயலாக மாறும் போது சுழல் காற்றாக மாறும். அப்போது திசை மாறும். ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது அதற்கு பின்னால் சக்தி பரிமாற்றம் இருக்கிறது. இதையெல்லாம் முழுமையாக அறியப்பட வேண்டும். இன்றைய காலகட்டங்களில் அவை முழுமையாக அறியப்படவில்லை.

    ஃபெஞ்சல் புயல் நேரத்தின்போது கூட அது செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை பார்க்கும்போது, புயலாக மாற சாத்தியம் இல்லை என்று சொன்னோம். பின்னர் இரவில் அது வளர்ச்சி பெற்றதால் புயலாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ''ஓடீஸ்'' புயலுக்கு 112 கி.மீ. வரைக்கும்தான் காற்று இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 260 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டது. புயலுக்குள் ஆய்வு விமானங்களை செலுத்தியும் விவரங்கள் பெறப்படுகிறது. ஆனால் அப்படி பெறப்பட்ட விவரங்களின் கணிப்புகளும் தவறுகிறது. அறிவியலின் வித்தியாசம் அதில் தெரிகிறது.

    எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மட்டுமே வானிலை நிகழ்வுகளை கணித்துவிட முடியாது. முழுமையாக அறிவியல் அறியப்படவேண்டும். ஏ.ஐ. தொழில்நுட்பம் இப்போது வந்து இருக்கிறது. தொடர்ந்து முயற்சிகளும் நடக்கிறது.

    காலநிலை மாற்றத்தினால் புயல் வலிமையாக உருவாகிறது. திசை மாற்றத்திலும் வேறுபாடு ஏற்படுகிறது. நகர்வு பாதையில் வேறுபாடு ஏற்படுகிறது. புயலை சுற்றியுள்ள மேகக்கூட்டங்கள் சமச்சீராக உருவாகாது. வானிலை கணிப்புகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளோம். தொடர் முயற்சிகளும் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடல் உள்பகுதியில் சீற்றமாக காணப்படுகிறது.
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்களில் கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.

    மேலும் கடல் உள்பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் இன்று 3-வது நாளாகமீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக வாவல் காலா, ஷீலா, திருக்கை, நண்டு, இறால் உள்ளிட்டஅனைத்து வகையான மீன்களும் கிடைத்து வந்தன. மீனவர்களுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்தது.

    இதனால் அதிகப்படியான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்தனர். இந்நிலையில் 3 நாட்களாக கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வில்லை.

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.
    • அஜ்மீரில் உள்ள தொலைதூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிப்பு.

    ஜெய்ப்பூர்:

    கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த நிலையதில், கடந்த 24 மணி நேரத்தில் நாகௌர் மாவட்டத்தில் உள்ள மக்ரானா பகுதியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ரத்தன்கர் (சுரு) 8 செ.மீ மழையும், ஹனுமன்கரில் சங்கரியா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.

    பனேரா (பில்வாரா), கெர்வாடா (உதைபூர்), பதம்பூர், சதுல்ஷாஹர் (இரண்டும் கங்காநகரில்), மற்றும் நவா (நாகூர்) தலா 6 செ.மீ., நரைனா (ஜெய்ப்பூர்), பசேரி (தோல்பூர்), சஜ்ஜன்கர் (பன்ஸ்வாரா), தோல்பூரில் 5 செ.மீ., சோட்டிசாத்ரி (பிரதாப்கர்), அக்லேரா, அஸ்னாவர் (இரண்டும் ஜாலவாரில்), கர்ஹி (பன்ஸ்வாரா), துங்லா (சித்தோர்கர்), மற்றும் பாரி (தோல்பூர்) ஆகியவை பதிவாகியுள்ளன. 4 செ.மீ மற்றும் பல இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் 4 செ.மீட்டருக்கும் குறைவான மழை பெய்துள்ளது.

    மறுபுறம், ஸ்ரீகங்காநகரில் ஒரு நாள் முன்பு பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேங்கிய பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு குழாய்கள் மற்றும் பிற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சுகாதியா மார்க், அசோக் நகர், மீரா சௌக், சுகாடியா சர்க்கிள், பூரணி அபாடி போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், அஜ்மீரில் உள்ள தொலைத்தூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென சந்தித்து பேசினார். மிக கனமழையையொட்டி அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விளக்கினார். #TNRains #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக அரசியல் களம் கடந்த 2 நாட்களாக சூடுபிடித்திருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாக பேசப்படுகிறது.

    இந்த பரபரப்புக்கு இடையே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. எனவே, மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபடத் தொடங்கியது.

    தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று இதை கூறினாலும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் சற்று நேரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னரை திடீரென சந்திக்க இருக்கும் தகவல் வெளியானது. இதில் அரசியல் பின்னணி இருக்கும் என்று கருதப்பட்டது.

    இந்த நிலையில், நேற்று இரவு 7.15 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அவருடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடன் சென்றார். இந்த சந்திப்பின்போது, தமிழக கவர்னராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி பன்வாரிலால் புரோகித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மிக கனமழை எச்சரிக்கையையொட்டி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கி கூறினார்.

    சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு இரவு 7.45 மணியளவில் அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டு சென்றார். கவர்னரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. #TNRains #TNREDAlert #EdappadiPalaniswami  #TNGovernor #BanwarilalPurohit
    ×