search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weekly Worship"

    • நைனாபத்து பஞ்சாயத்து அம்மன்புரத்தில் தலைவி சக்திகனி தலைமையில், துணைத்தலைவி செல்வலட்சுமி, பொதுச்செயலாளர் தங்கேஸ்வரி முன்னிலையிலும் வழிபாடு நடந்தது.
    • ராமாயணம், மகாபாரதம் மற்றும் பழங்கால புராண கதைகள், இந்துக்களின் எழுச்சி , இந்துக்களின் ஒற்றுமை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் கேசவன் ஆலோசனைப்படி உடன்குடி பகுதியில் 12 கிராமங்களில் இந்து அன்னையர்முன்னணி வார வழிபாடு நடைபெற்றது. நைனாபத்து பஞ்சாயத்து அம்மன்புரத்தில் தலைவி சக்திகனி தலைமையில், துணைத்தலைவி செல்வலட்சுமி, பொதுச்செயலாளர் தங்கேஸ்வரி முன்னிலையிலும் வழிபாடு நடந்தது. தைக்காவுரில் தலைவி சுயம்புக்கனி தலைமையிலும், பிச்சிவிளை ஊராட்சி புதூரில் தலைவி ரசீத்தா தலைமையில், செயலாளர் இசக்கியம்மாள் முன் னிலையிலும் நடைபெற்றது.

    வடக்கு தெருவில் தலைவி செல்வகுமாரி தலைமையில், பொதுச்செயலாளர் அமுதா, பொருளாளர் சுஜாதா முன்னிலையிலும், மாநாடு தண்டுபத்து ஊராட்சி அரசர் பேட்டை கிராமத்தில் தலைவி ராஜசிபா தலைமையில், துணைத்தலைவி பேச்சியம்மாள்,செயலர் சக்திகனி, பொதுச் செயலாளர் வேல்கனி முன்னிலையிலும் வழிபாடு நடந்தது.

    பரமன்குறிச்சிஊராட்சி முருகேசபுரத்தில் தலைவி செல்வி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்னபுஷ்பம் முன்னிலை வகித்தார். இதே ஊராட்சி வட்டன்விளையில் செயலாளர் செல்வி தலைமையில், செம்மறிகுளம் ஊராட்சி ராம சுப்பிரமணியபுரத்தில் துணைத்தலைவி மல்லிகா தலைமையிலும், செயலாளர்கள் தமிழ்ச்செல்வி, பத்ரகாளி, தங்க புஷ்பம் முன்னிலையில் வழிபாடு நடந்தது.

    கூட்டத்தில் வருகின்ற ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் வைப்பது, தினசரி வீடுகளில் அம்மன் உருவச்சிலை வைத்து மஞ்சளால் அபிசேகம்செய்வது, அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி விரிவாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. ராமாயணம், மகாபாரதம் மற்றும் பழங்கால புராண கதைகள், இந்துக்களின் எழுச்சி , இந்துக்களின் ஒற்றுமை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

    ×