search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welding workshop worker dies"

    • மோட்டார்சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
    • சிகிச்சையில் இருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை வேடிச்சி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). வெல்டிங் பட்டறை தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று மாலை நெரிஞ்சிப் பேட்டையில் இருந்து பூனாச்சிக்கு மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களான நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த கேசவன் (24), பாரதி (19) ஆகியோரை பின்னால் அமர வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    அந்தியூர் ரோட்டில் அம்மாபேட்டையை அடுத்து செலம்பனூர் பிரிவு அருகில் சென்ற பொழுது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும் மணிகண்டன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பித்தனர்.

    இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இறந்து போன மணிகண்டனுக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், 2 வயதில் குழந்தையும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×