என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WelfareHelp"

    • கொட்டாரக்கரை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. அலுவலகத்தை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் திறந்து வைத்தார்.
    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை குடும்பத்திற்கு சோலார் விளக்குகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. அலுவலகத்தை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் திறந்து வைத்தார்.

    அவருக்கு புனலூர் எல்கையில் கேரள மாநில தி.மு.க. சார்பில் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.கொல்லம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரிஜுராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் போது ஏழை குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சோலார் விளக்குகள் வழங்கப்பட்டது.

    பின்னர் ஊர்வலமாக சென்று கொட்டாரக்கரை நகராட்சி அலுவலகம் வரை சிறப்பு பேரணி நடத்தப்பட்டது.கேரள மாநிலம் புனலூரைத் தொடர்ந்து கொட்டார கரையில் தி.மு.க. அலுவலகம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கேரள நிர்வாகிகள் அஜ்மல், சரவணன், பிச்சை பிலால் ரினு சியாம்லால், செய்யது, அஜித் வினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பா.ஜனதா மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம், சாமிதுரை, தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, ரவிசங்கர், அழகு சுந்தரம், செங்கோட்டை நகரச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஹக்கீம், முத்துவேல், பேரூர் செயலாளர்கள் சுடலை, சங்கர் என்ற குட்டி முத்து மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, முருகன் அமைப்பாளர் முத்துராமலிங்கம்,உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் சிவ அருணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் இசக்கி பாண்டியன், ராம்குமார் ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜாமணி, குற்றாலம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணா ஸ்ரீதர் தகவல் தொழில் நுட்ப அணி முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், ஹபிப் நிஷா, இஸ்மாயில்,சாகுல் ஹமீது, தீபன் சக்கரவர்த்தி மாணவர் அணி மாரியப்பன், சுந்தர், தளபதிமுருகேசன், ஸ்டீபன், மகேந்திரன், சேக்மைதீன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மானியத்தின் மூலமாக பெறப்பட்ட உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளியில் இன்று தனியார் மண்டபத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊத்துக்குளி வட்டாரத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை, சமூக நலத்துறை, பொது சுகாதாரம் ,நோய் தடுப்பு துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் வினீத் பார்வையிட்டார்.

    பார்வையிட்ட பிறகு அந்தந்த துறைகளில் மானியத்தின் மூலமாக பெறப்பட்ட உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்குளி தீயணைப்புத் துறையின் சார்பாக தீ விபத்து ஏற்படும்போது தற்காத்துக் கொள்ள செயல் விளக்க செய்முறை செய்து காண்பிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்குளி யூனியன் சேர்மன் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
    • முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக வருகிற 28-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்கிறார். 29-ந்தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    அரசு சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.

    விழுப்புரத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான 21 சமூக நீதி போராளிகளுக்கான மணி மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியும் அப்போது நடைபெறுகிறது.

    29-ந் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சமூக நீதி போராளிகள் குடும்பத்தினர் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் அரசியல் கட்சியினர் என முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராம தாஸ் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்ப ஏற்பாடு கள் நடந்து வருகிறது.

    இதையொட்டி நேற்று விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், சமூக நீதி போராளிகள் மணிமண்ட பம் திறப்பு விழாவில் பங்கேற்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி அவருக்கும் மற்ற பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்படும் என்றார்.

    தற்போது பா.ம.க., பா.ஜனதா கூட்டணியில் இருந்து வருகிறது. தி.மு.க. எதிர்ப்பு அரசியல் செய்து வரும் பா.ம.க.க்கும் தலைவர்கள் தி.மு.க. அரசு விடுத்துள்ள அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து பா.ம.க. நிர்வாகி கூறியதாவது:-

    சமூக நீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் நிகழ்ச்சி இது. பா.ம.க.வின் நீண்டகால கோரிக்கையும் கூட. அதனால் இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ள போவாரா? இல்லையா? என்பது இனி மேல் தான் தெரியவரும். ஆனால் இதில் அன்புமணி ராமதாசை பங்கேற்குமாறு கண்டிப்பாக அனுப்பி வைப்பார்.

    அடுத்து ஆளப்போகும் கட்சியுடன்தான் கூட்டணி என்று அன்புமணி தொடர்ந்து கூறி வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பா.ம.க. பங்கேற்க இருப்பது அரசியலுக்கான கூட்டணி அச்சாரம் என்று பலர் பேசுவார்கள். அது போக போகத்தான் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×