என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "were"
- பவானி அருகே உள்ள ஜம்பை கருக்கபாளையம் ரோடு பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தின் அருகில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
- இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
சித்தோடு:
பவானி அருகே உள்ள ஜம்பை கருக்கபாளையம் ரோடு பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தின் அருகில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவயிடம் விரைந்து சென்றுள்ளனர். அப்போது பவானி வடக்கு பள்ளி வீதியை சேர்ந்த செந்தில் (47), பாலக்கரை வீதியை சேர்ந்த கோகுல் (20), ஒருச்சேரிபுதூரை சேர்ந்த கதிர்வேல் (47) பவானி காவேரி வீதியை சேர்ந்த சங்கர் (54) ஆகிய 4 பேர் வெள்ளை கலரில் 2 சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
- பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப் பணம் ரூ.36, 190 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் சிவகாமி என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள கால் நடை வளர்ப்புப் பகுதியில் பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பெருந்துறை சப்- இன்ஸ்பெக்டர் செந்தி ல்குமார் தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது அதேப் பகுதியைச் சேர்ந்த சிவகாமியின் மகன் தினேஷ்குமார் (30) மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
மேலும், சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 8 சேவல்கள், சேவல்களின் கால்களில் கட்டப்படும் கத்திகள் 21 மற்றும் சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப் பணம் ரூ.36, 190 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
- சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் முறையாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 வாரத்திற்கும் மேலாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 993 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்ட–த்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 23 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இதையடுத்து மாவட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். எனினும் பொதுமக்கள் இன்னமும் அலட்சியமாக முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சென்று வருகின்றனர். பொதுமக்கள் முறையாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்துள்ளனர்.
இதேபோல் மாவட்ட–த்தில் தினசரி மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை எண்ணி–க்கை–யை மேலும் அதிகப்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்