search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Bengal"

    • லாமாவை இந்த அளவு வன்மத்தோடு யார் கொலை செய்தனர் என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது
    • லாமாவின் குடும்பத்தினர் தாங்கள் சந்தேகப்படும் 7 பேர் மீது புகார் அளித்துள்ளனர்.

    மேற்கு சிங்கத்தில் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு வாயில் திணிக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அலிபூர்துவார் [Alipurduar] நகரில் உள்ள ஜெய்கான் [Jaigaon] பகுதியில் நேற்று முன்தினம் இந்த கொடூர நிலைக்கு ஆளாக்கப்பட்டவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    அந்த உடல் அப்பகுதியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த சாந்தாபீர் லாமா [Santabir Lama] என்பவருடையது என்று தெரியவந்துள்ளது. தல்சிங்பாரா [Dalsingpara] பகுதியைச் சேர்ந்த லாமா சில வருடங்கள் முன்னர் ஜெய்கான் பகுதியில் வந்து குடியேறி ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார்.

    அப்பகுதியில் உள்ள உள்ளூர் தேவாலயத்திலும் இயங்கி வந்துள்ளார். இந்நிலையில் லாமாவை இந்த அளவு வன்மத்தோடு யார் கொலை செய்தனர் என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

    லாமாவின் குடும்பத்தினர் தாங்கள் சந்தேகப்படும் 7 பேர் மீது புகார் அளித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட லாமாவின் உடல் அலிபூர்துவார் மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    • திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலரை பைக்கில் வந்த இருவர் அவரை சுட முயன்றனர்.
    • இதனையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றுள்ளனர்.

    மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சுஷாந்தா கோஷை துப்பாக்கியால் சுடமுயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நவம்பர் 15 அன்று இரவு 8 மணியளவில் சுஷாந்தா கோஷ் தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் அவரை சுட முயன்றனர். ஆனால் அந்த சமயத்தில் துப்பாக்கி வேலை செய்யவில்லை.

    இதனையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றுள்ளனர். உடனடியாக சுஷாந்தா கோஷும் உள்ளூர் மக்களும் சேர்ந்து துப்பாக்கியால் சுட முயன்ற நபரை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 2 செய்தித்தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முகமது இக்பால் என்ற நபர் தான் கோஷை கொலை செய்ய தன்னை அனுப்பியதாக ஒப்புக்கொண்டார்.

    இந்த சமபவத்தில் பைக்கில் வந்து தப்பியோடிய இரண்டாவது நபரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    • பாதிக்கப்பட்ட நபர் கார் ரெண்டல் இணையதளங்களை கூகுளில் தேடியுள்ளார்.
    • சக்தி கார் ரெண்டல் இணையதளத்தின் தொலைபேசி எண்ணிற்கு அவர் அழைத்துள்ளார்.

    கர்நாடகாவில் போலியான கார் புக்கிங் இணையதளத்தில் கார் புக் செய்த நபர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 4.1 லட்சத்தை இழந்துள்ளார்.

    மேற்குவங்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கார் ரெண்டல் இணையதளங்களை கூகுளில் தேடியுள்ளார். அப்போது அவரின் கண்ணில் தென்பட்ட சக்தி கார் ரெண்டல் இணையதளத்தின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்துள்ளார்.

    அப்போது அவரிடம் பேசிய நபர், எங்கள் இணையதளத்தில் 150 ரூபாய் செலுத்தி காரை புக்கிங் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    அவரும் தனது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து பணம் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் அவரால் பணம் செலுத்தமுடியவில்லை. அப்போது தான் அவரது வங்கிக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கான பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு வங்கியில் இருந்து மெசேஜ் வந்துள்ளது.

    எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டில் இருந்து ரூ. 3.3 லட்சமும் கனரா வங்கி டெபிட் கார்டில் இருந்து 80,056 ரூபாயும் என மொத்தமாக 4.1 லட்சம் ரூபாயை அவர் இழந்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள உடுப்பி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
    • சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

    நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக பலர் மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஊடுருவி தங்கி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்து பெயர்களுடன் கூடிய ஆதார் அட்டையுடன் சில பெண்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவியதாக ராஞ்சியில் உள்ள பரியாது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ராஞ்சி உள்ளிட்ட 17 இடங்களில் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்படுபவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் இன்று அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் தொண்டர் ஒருவரின் உடல் நேற்றிரவு கிடந்துள்ளது.
    • இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உஸ்தி நகரில் பா.ஜ.க.வின் கட்சி அலுவலகம் உள்ளது. இதில், அக்கட்சி தொண்டர் ஒருவரின் உடல் நேற்றிரவு கிடந்துள்ளது. அவருடைய உடலின் சில பகுதிகளில் காயங்கள் காணப்படுகின்றன.

    தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலையான நபர் பிருத்விராஜ் நஸ்கார் என்பதும், கட்சியின் சமூக ஊடக பிரிவில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

    இந்தப் படுகொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் சுகந்த மஜும்தார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சியினரை மிரட்டுவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

    இதற்கிடையே, இதுதொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • ஒடிசா- மேற்கு வங்கம் இடையே நேற்று நள்ளிரவு கரையை கடக்க தொடங்கியது.
    • ஒடிசாவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    வங்கக் கடலில் உருவான டானா தீவிர புயல் நேற்று நள்ளிரவு கரையை கடக்க தொடங்கிய நிலையில், இன்று காலை கரையை கடந்தது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கரையை கடந்து வலுவிழக்க இன்று மதியம் ஆகும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இவ்விரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். தென்கிழக்கு ரெயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை ரெயில்வே சாா்பில் இயக்கப்படும் 400-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம், கொல்கத்தா விமான நிலைங்களில் விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இன்று காலை 9 மணி வரை தற்காலிகமாக இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

    ஒடிசாவின் பிதா்கனிகா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் டானா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது 110.கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்கும் சமயத்தில் அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

    ஒடிசாவின் பாலசோா், பத்ரக், பிதா்கனிகா, புரி உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்து சாலைகளின் குறுக்கே விழுந்தன.

    முன்னெச்சரிக்கையாக கேந்திரபாரா, பத்ரக், பாலசோா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 3.5 லட்சம் போ் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    டானா புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதி மாவட்டங்களில் சுமாா் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

    • மேற்கு வங்கத்தில் விமானம், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
    • அதிகனமழை பெய்யும் என்பதால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலாக வலுப்பெற்று, நேற்று டானா புயலாக மாறியது. கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் டானா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடற்பகுதியில் ஒடிசாவின் பிட்டார்கனிகா மற்றும் தமரா பகுதியை ஒட்டிய பூரி- சாகர் தீவு இடையே கரையை கடக்கும். இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரையிலான காலக்கட்டத்தில் கரையை கடக்கும். இந்த தீவிர புயல் காரணமாக 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்த தீவிர புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இன்று மாலை முதல் விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. சுமார் 190 உள்ளூர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்படுகின்றன.

    ஒடிசாவிலும் விமான சேவைகள் இன்று மாலை நிறுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 6 மணி நேரப்படி மணிக்கு 15 கி.மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும், ஒடிசாவின் பரதிப்பில் இருந்து தென்கிழக்கே 330 கி.மீட்டர் தூரத்திலும், ஒடிசாவின் தமராவின் தெற்கு-தென்கிழக்கே 360 கி.மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவின் தெற்கு-தென்கிழக்கு 420 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

    • வேகமாக வந்த பைக் கார் மீது மீதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது.
    • இந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சாலையை கடப்பதற்காக மெதுவாக ஒரு கார் திரும்பியுள்ளது. அப்போது அவ்வழியே வேகமாக ஒரு பைக் ஒன்று செல்கிறது. அதன் பின்னால் வேகமாக வந்த பைக் கார் மீது மீதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து பைக்கில் வந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் பைக்கில் பயணம் செய்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து அக்டோபர் 11 அன்று நள்ளிரவு 12 மணியளவில் ஹூக்ளியில் உள்ள போல்பார் ராஜ்காட் சந்திப்பில் நடந்துள்ளது.

    இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையிலான ரேஸ் போட்டியின் போது இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தினால் காருக்குள் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெற்றோர் புகாரின் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியைக் காப்பாற்றி இருக்கலாம்
    • காவல் நிலையத்திற்கும், அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

    மேற்கு வங்கத்தில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்கானாஸ் மாவட்டத்தில் ஜாய் நகர் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை டியூஷன் சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் காணாமல் போனதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

    பின்னர் தேடுதலில் இறங்கிய கிராமத்தினரால் குளத்தில்  இருந்து சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி வீட்டுக்கு வரும் வழியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லபட்டதாக  பெற்றோரும் ஊராரும்  தெரிவிக்கின்றனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    பெற்றோர் புகாரின் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியைக் காப்பாற்றி இருக்கலாம் எனவும் வேண்டுமென்றே அவர்கள் காலதாமதம் செய்ததாகவும் குற்றம் சாட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலரால் காவல் நிலையத்திற்கும், அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைத்தனர்.

     

    இதற்கிடையில் சிறுமி கொலை தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் ஒரு நபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கொலையாளி சிறுமிக்கு ஐஸ் க்ரீம் வாங்கிக்கொடுத்து சைக்கிளில் கடத்தியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளது.

    இதற்கிடையில் இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கு 3 மாதங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். மேற்கு வங்கம் நாட்டின் வன்கொடுமை தலைநகரமாக மாறியுள்ளதாக பாஜக அமைச்சர் சுகந்தா மஜூம்தார் விமர்சித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவர் கொலைக்கு நியாயம் கேட்டு ஜுனியர் மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்  அறிவித்திருப்பது  குறிப்பிடத்தக்கது.

     

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்கத்தில் துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன.
    • நவராத்திரியின் 9 நாட்களுக்கும் கைதிகளுக்கு அசைவ உணவு வகைகள் வழங்கப்படவுள்ளது.

    மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய பண்டிகையான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், துர்கா பூஜையை முன்னிட்டு அம்மாநில கைதிகளுக்கு சிறையில் மட்டன் பிரியாணியும் பசந்தி புலாவும் உணவாக வழங்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நவராத்திரியின் 9 நாட்களுக்கும் கைதிகளுக்கு இந்த புதிய உணவு வகைகள் வழங்கப்படவுள்ளது. துர்கா பூஜை விழாவின் போது சமையற்காரர்களாக பணிபுரியும் கைதிகளே இந்த உணவு வகைகளை சமைக்கவுள்ளார்கள்.

    கைதிகளின் மத உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், விருப்பப்படும் கைதிகளுக்கு மட்டும் தான் அசைவ உணவு வழங்கப்படும் என்றும் பண்டிகை உணர்வை கைதிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மேற்கு வங்க மாநிலத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன
    • பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் காணச் சகிக்காது கண்களை மூடியுள்ளார்

    மேற்கு வங்க மாநிலத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன. தலைநகர் கொல்கத்தாவில் வருடந்தோறும் நவராத்திரி கொண்டாட்டத்தில் பல்வேறு விஷயங்களில் பின்னணியில் துர்கை சிலை பந்தல்கள் உருவாக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், இந்த வருடம் அமைக்கப்பட்டுள்ள பந்தல் ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அனைவரும் அறிந்ததே நாடு முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியிருந்தது.

    கொல்கத்தாவிலும் இந்நாள்வரை போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு துர்கா பூஜா பந்தல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 'அவமானம்' என்ற தலைப்பில் அமைக்கப்பட்ட அந்த பந்தலில் பல கைகள் கொண்ட தேவி துர்க்கை இரு கைகளால் கண்களை மறைத்தவாறு வெட்கத்தில் நிற்பதுபோல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

     

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் காணச் சகிக்காது அவர் கண்களை மூடுவது போல் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிலைக்கு முன்பு வெள்ளைத் துணியால் பெண் மூடப்பட்டு விழுந்துகிடப்பது போன்றும், மருத்துவர்களின் உடை சுவரில் தொங்குவதுபோன்றும் அந்த பந்தலில் அமைக்கப்பட்ட இந்த பந்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    • பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் வேலை நிறுத்தம்.
    • மருத்துவமனையின் கட்டமைப்பு, பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வதை்துள்ளனர்.

    மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் ஒருவர் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கியது.

    பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறிய மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு, டாக்டர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    இருந்த போதிலும் மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள் உள்பட தங்களது அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஜூனியர் டாக்டர் அமைப்பின் முக்கிய குழு ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் இன்று மதியம் நடைபெறும் பேரணிக்குப் பிறகு வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான வேலை நிறுத்தம் திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    எனினும், மாநில அரசுக்கு அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற காலக்கெடு விதிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

    நோயாளிகள் இன்னல்களை சந்திப்பதால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஜூனியர் டாக்டர்களை சஸ்பெண்ட் செய்ய சீனியர் டாக்டர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்கதக்து.

    ஜூனியர் டாக்டர்கள் 42 நாட்கள் முழு வேலை நிறுத்தம் செய்தனர். மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர்களுடைய போராட்டம் செப்டம்பர் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அப்போது முக்கியமான மருத்துவ சேவை பாதிக்கக்கூடாது என்ற வகையில் முடிவு செய்தனர். பின்னர் அக்டோபர் 1-ந்தேதி மீண்டும் தங்களது வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

    ×