search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "who smuggled"

    • கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து சமீப காலமாக கர்நாடகா மாநிலத்திற்கும், ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருக்கும் வெளி மாநிலத்தவர்களுக்கும் ரேஷன் அரிசியை அதிகளவில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    எனவே இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலையில் ஏரகனஹள்ளி -திகினாரை சாலையில் தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் மூட்டையுடன் வந்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அருகில் இருந்த புதரில் சென்று தப்பி சென்று விட்டனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது ரேஷன் அரிசி கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்டது திகினாரையை சேர்ந்த மாதேவா, ஜெயலட்சுமி என தெரிய வந்தது. தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் போலீசார் ஒப்படை த்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த கணக்கம்பாளையம் சின்னகாளியூர் வேதபாறை பள்ளம் அருகே ரேசன் அரிசி கடத்துவதாக பங்க ளாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் வேனில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பேரிசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் மேட்டு நாசுவம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்க டேஷ் (34) என்பதும், 40 கிலோ எடையுள்ள 22 மூட்டைகள் என சுமார் 1 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து பிடிபட்ட ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் அவர் ஓட்டி மினி ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்தனர்.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் போலீசார் ஒப்படை த்தனர்.

    • மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.
    • கடையின் உரிமையாளரான ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோமன் ஸ்டாச்ரக்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.

    அதன் பேரில் ஈரோடு தென்றல் நகரில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா என 12 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிவந்தது.

    இவற்றின் மதிப்பு ரூ.16 ஆயிரம் ஆகும். இதை அடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளரான ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோமன் ஸ்டாச்ரக்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ×