என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Widespread rainfall in"
- மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது.
- கவுந்தப்பாடி பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
ஈரோடு:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகி றது. குறிப்பாக இரவு நேரத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கோபி, நம்பியூர், புளியம்பட்டி பகுதியில் உள்ள தரைப்பால ங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது. இந்நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி யில் இரவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, கோபி, பெரு ந்துறை, தாளவாடி, கொடுமுடி, சத்தியமங்கலம், நம்பியூர் போன்ற பகுதிகளி லும் சாரல் மழை பெய்தது.
கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் அணைப்பகுதிகளான வரட்டுப்பள்ளம், குண்டேரி ப்பள்ளம், பவானிசாகர், கொடிவேரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கவுந்தப்பாடி-28.20, வரட்டுப்பள்ளம்-17, பவானி-15.80, அம்மா பேட்டை-14.20, தாளவாடி-11, கோபி-10.20, பெருந்துறை-10, பவானி சாகர்-8.20, கொடுமுடி-8, ஈரோடு-6.20, கொடிவேரி-6, சத்தியமங்கலம்-3, நம்பியூர்-2.
- வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.
- இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஈரோடு புறநகர் பகுதிகளான சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. பலத்த சூறாவளி காற்றால் தாளவாடி பகுதியில் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
ஆனால் அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.
ஆனால் மாலை நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.
ஈரோடு மாநகர் பகுதியில் மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
இதேப்போல் வரட்டுப்ப ள்ளம், பவானி, நம்பியூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
வரட்டுபள்ளம்-21.60, பவானி-14, ஈரோடு-9.50, நம்பியூர்-2, குண்டேரி ப்பள்ளம்-2.
- ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
- இந்த திடீர் மழையால் ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திர வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து கரும் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. மாலை முதல் இரவு வரை ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணை பகுதியில் 22 மி.மீ மழை பதிவாகி இருந்தது.
இதேப்போல் நம்பியூர், எலந்த குட்டைமேடு, பவானிசாகர், சத்திய மங்கலம், வரட்டுப்பள்ளம், குண்டேரி பள்ளம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
எதிர்பாராத வகையில் பெய்த இந்த திடீர் மழையால் ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொடிவேரி அணை-22, நம்பியூர், எலந்த குட்டை மேடு-18, பவானிசாகர்-16.40, சத்தியமங்கலம்-15, குண்டேரி பள்ளம் அணை-11.60, வரட்டுப்பள்ளம் அணை-10.80, தாளவாடி-1.50.
- மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 54 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
- பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முழுவதும் வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து ஆங்காங்கே இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக தாளவாடி அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும், வெப்ப சலனம் அதிகமாக காணப்பட்டது. மாலை 5 மணிஅளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. அதைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணிநேரம் ஈரோடு மாநகர் பகுதியில் கனமழை கொட்டியது.
வீரப்பன்சத்திரம், பஸ்நிலையம், பெரியவலசு, பன்னீர்செல்வம் பூங்கா, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், ரங்கம்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, கொங்கலம்மன் கோவில் வீதி, முனிசிபல் காலனி, பெருந்துறைரோடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதேபோல் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது.
பலத்த மழை காரணமாக ஈரோடு நாடார்மேடு கெட்டிநகர் பகுதியில் சாஸ்திரிநகர் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் மின் வயர்களும் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மாலை 6 மணிஅ ளவில் இருந்து மின் வினியோகம் துண்டித்தது. நள்ளிரவிலும் மின் வினியோகம் சரி செய்யப்படாததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதேபோல் ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டு பின்பகுதியில் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது.
இதேபோல் மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 54 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
பவானியில் சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. தாளவடியில் கடந்த 4 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் தாளவாடி மலைப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
மாவட்டத்தின் முக்கிய அணைப்பகுதிகளான வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம், பவானிசாகர், கொடிவேரி அணைப்பகுதி போன்றவற்றில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரை ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது .அப்போது மின்னல் தாக்கியதில் புஞ்சைபுளியம்பட்டி அருகே பொன்னம்பாளையத்தில் உள்ள பழமையான மதிப்பாபுரி அம்மன் கோவில் கோபுரம் சேதம் அடைந்தது.
மேலும் கோபுரத்தில் உள்ள சில சாமி சிலைகளும் சேதம் அடைந்தது. மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கிய நாள் முதல் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
அம்மாபேட்டை-54, தாளவாடி - 34.2, ஈரோடு - 23, பவானி - 10.8, குண்டேரி பள்ளம் - 8.2, வரட்டுபள்ளம் - 6.8, சென்னிமலை - 6.4, கோபி - 4.2, பெருந்துறை - 4, எலந்தகுட்டைமேடு-3.2, கொடிவேரி அணை - 3, சத்தியமங்கலம் - 2, பவானிசாகர் - 1.8.
- மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
- வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள், மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரதான அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன.
சத்தியமங்கலம், கொடுமுடி, மொடக்குறிச்சி, பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில் நேற்று மாவட்ட முழுவதும் மாலை முதல் இரவு வரை பலத்த முதல் மிதமான மழை வரை பெய்துள்ளது. மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதன் காரணமாக இந்த பகுதிகளில் ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இங்கு 31.40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் பவானிசாகர், பெருந்துறை, குண்டேரிபள்ளம், அம்மா பேட்டை, சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, கொடுமுடி, நம்பியூர், பவானி, கோபி, வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
மாநகர பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
மொடக்குறிச்சி-31.40, பவானிசாகர்-30.2, பெருந்துறை-21, குண்டேரிபள்ளம்-21, அம்மாபேட்டை-15.60, ஈரோடு-12, சத்திய மங்கலம்-12, கவுந்தப்பாடி-6.20, கொடுமுடி-6, நம்பியூர்-5, கோபி-3.20, பவானி-3, வரட்டுபள்ளம்-1.40.
- ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
- சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி அந்தியூர், அம்மாபேட்டை, கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.
இதேபோல் குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், பெரும்பள்ளம் போன்ற அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரி, குளங்கள், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 56 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதேப்போல் கவுந்தப்பாடி, கொடிவேரி, குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், மொடக்குறிச்சி, சென்னிமலை, நம்பியூர், பவானி, பவானிசாகர், தாளவாடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
சத்தியமங்கலம்-56, கவுந்தப்பாடி-40, அம்மா பேட்டை-40, கொடிவேரி-37, குண்டேரிபள்ளம்-29, நம்பியூர்-25, வரட்டுபள்ளம்-16, தாளவாடி-14, பவானி-12.80, மொடக்குறிச்சி-12.40, பவானிசாகர்-12, சென்னிமலை-2.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்