search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife complaint"

    • வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரும்போது என்கவுன்ட்டர்செய்ய திட்டம்.
    • தேசிய மனித உரிமை ஆணையத்தில் நாகேந்திரன் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மேலும், ரவுடிகளிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் பரவியது.

    இந்த விவகாரம் தொடர்பாக, ரவுடி நாகேந்திரனை என்கவுன்ட்டரில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி விசாலாட்சி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன்படி, வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரும்போது என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக புகார் தெரவித்துள்ளார்.

    அதனால், உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் நாநே்திரன் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

    • ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்ப ட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • வழக்குபதிவு செய்து காணாமல் போன கணேசனை தேடி வருகின்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காட்டா ண்டி க்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). விவசாயி, இவர்கடந்த1-ந் தேதி காலை 8 மணிக்கு பண்ருட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்ப ட்டு சென்றவர் வீடு திரும்பவி ல்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காடாம்புலியூர் போலீசில் கணேசன் மனைவி மல்லிகா புகார் கொடுத்தார். காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன கணேசனை தேடி வருகி ன்றார்.

    • ஓட்டலில் ஊழியராக வேலை செய்துவந்தார். இவர் திடீரென மாயமானார். இவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    • சிவகுமார் மனைவி கீதா பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். .

    க்டலூர்:

    பண்ருட்டி அப்பாளுபத்தர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (57) இவர், பண்ருட்டி- சென்னை சாலையில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை செய்துவந்தார். இவர் திடீரென மாயமானார்.

    இவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து சிவகுமார் மனைவி கீதா பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஓட்டல் ஊழியர் சிவகுமாரை தேடி வருகிறார்.

    • திருமணமாகி 11 வயதில் பெண் குழந்தையும்,7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
    • கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவ ருக்கும் திருமணமாகி 11 வயதில் பெண் குழந்தையும்,7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமது கணவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதனால் அவரது கணவர் அவரையும், பிள்ளைகளையும் விட்டு சென்று விட்டதாக விருத்தா சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மேலும் அவரின் மாமியார், நாத்தனார், நாத்தனாரின் கணவர் உள்ளிட்டவர்கள் தம்மை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தார். தனது கணவரை அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டு தன்னுடன் இணைந்து வாழ வைக்க வேண்டும் என்ற தனது 7 வயது மகன் மற்றும் உறவினர்களுடன் வந்து முனியம்மாள் புகார் அளித்தார்.

    • நேசவள்ளி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • திடீரென்று எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகர் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 38). எலெக்ட்ரிசியன். இவரது மனைவி நேசவள்ளி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், கடந்த அக்டோபர் 1- ந்தேதி மின் ஊழியர் பாஸ்கர் என்பவர் எனது கணவர் ஜேசுதாசை அழைத்துக் கொண்டு தேவனாம்பட்டினம் சுடுகாடு அருகே ட்ரான்ஸ்பார்மரில் ஏறி வேலை செய்ய கூறியதால், எனது கணவரும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார்.

    பின்னர் இவரை மீட்டு கடலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல ப்பட்டு, சென்னைக்கு கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். அப்போது இடது கை நீக்கப்பட்டது. ஆகையால் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் மின் ஊழியர் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசத்தில் தாய் வீட்டிற்கு சென்ற கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    பாபநாசம்:

    பாபநாசம் நகர சுத்தி தொழிலாளர் காலனியில் வசித்து வந்தவர் முருகானந்தம் (வயது35). கூலித்தொழிலாளி. இவர் மனைவி மேரி (27). கணவன்-மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் முருகானந்தம் அதே தெருவில் வசித்து வரும் தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இந்நிலையில் அவரது மனைவி மேரி கணவர் முருகானந்தம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் பிரேதத்தை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அருகே வயலுக்கு சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள மைக்கேல்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சேவியர் பிரிட்டோ (வயது 42) இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூர் தங்கைய்யா நகரைச் சேர்ந்த ரோசி (41) என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண், பெண் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மாத்தூரில் வசித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சேவியர் பிரிட்டோ தன் தாய் வீடான மைக்கேல் பட்டிக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில் மைக்கேல்பட்டியில் வயலுக்கு சென்ற சேவியர் பிரிட்டோ மயங்கி விழுந்து இறந்து விட்டார்.

    தகவல் அறிந்து மாத்தூரில் இருந்து மைக்கேல்பட்டி வந்த ரோசி கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கென்னடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ஓச்சேரி அருகே கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரையடுத்து, பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
    பனப்பாக்கம்:

    ஓச்சேரியை அடுத்த களத்தூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பொன்னையன் (வயது 29), தொழிலாளி. இவரது மனைவி சர்மிளா (21). பொன்னையா கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் களத்தூர் பாலாற்றில் புதைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி சர்மிளா தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தனது கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இதையடுத்து நேற்று களத்தூர் பாலாற்றில் புதைக்கப்பட்ட பொன்னையாவின் உடலை தோண்டி எடுக்க அவளூர் போலீசார் ஏற்பாடு செய்தனர்.

    அதைத்தொடர்ந்து காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, நெமிலி தாசில்தார் கந்தீர்பாவை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொன்னையாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கு வந்திருந்த அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை நிபுணர்கள் டாக்டர் நரேந்திரகுமார் மற்றும் டாக்டர் கலைச்செல்வி ஆகியோர் பொன்னையாவின் உடல் கூறுகளை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னரே பொன்னையாவின் சாவில் உள்ள உண்மை தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பல்லடம் அருகே வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பனியன் நிறுவன தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் அவருடைய மனைவி புகார் செய்துள்ளார்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 46). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு தரனீஷ் (11) என்ற மகனும், கிருத்திகா (9) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியில் சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்த வெள்ளியங்கிரி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வெள்ளியங்கிரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து வெள்ளியங்கிரியின் மனைவி கவிதா, பல்லடம் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:–

    எனது கணவரின் உறவினர்கள் சுப்பிரமணி மற்றும் ஆறுமுகம். இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதில் எனது கணவர் ஆறுமுகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கொசவம்பளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் அருகே எனது கணவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணியும், அவருடைய மகனும், என்னுடைய கணவருடன் தகராறு செய்துள்ளனர். அதன்பின்னர் வீட்டிற்கு வந்த எனது கணவர், மயங்கி விழுந்தார். எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து வெள்ளியங்கிரியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
    கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியதாக மனைவி போலீசில் புகார் செய்ததால் மனவேதனை அடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பொற்படாகுறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மங்கைகரசி (26).

    இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த மங்கைகரசி கோபித்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    பின்னர் மங்கைகரசி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் தனது கணவர் சரவணன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் செய்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த சரவணன் வீட்டுக்கு போலீசார் நேற்று மாலை சென்றனர். வீட்டில் இருந்த சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் சொல்லும் போது போலீஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என்று சரவணனிடம் போலீசார் கூறி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த சரவணன் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது

    பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சாலிகிராமத்தில் ஓட்டல் ஊழியரை மர்ம கும்பல் தாக்கி ஆட்டோவில் கடத்தி சென்றனர். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    போரூர்:

    சாலிகிராமம், ஸ்டேட் பாங்க் காலனி, 2-வது தெருவில் வசித்து வருபவர் இம்ரான் (வயது 25). இவரது மனைவி சரஸ்வதி. இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இம்ரான் திருவண்ணாமலையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் வேலையை விட்டு வந்து விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அதிகாலை இம்ரான் வீட்டுக்கு ஆட்டோவில் மர்ம வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இம்ரானை வெளியே அழைத்து திடீரென சரமாரியாக தாக்கினர்.

    மேலும் அவரை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றுவிட்டனர். அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி இதுபற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் தரவேண்டும் என்று கூறி மர்மகும்பல் கணவர் இம்ரானை கடத்தி சென்று உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

    இம்ரான், திருவண்ணாமலையில் உள்ள ஓட்டலில் வேலைபார்த்த போது ஏதேனும் தகராறு உள்ளதா? என்று விசாரித்து வருகிறார்கள். அங்கு வேறு யாருடனும் ஏற்பட்ட மோதலில் அவரை மர்ம கும்பல் கடத்தி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதற்கிடையே வீட்டில் இருந்த இம்ரானை மர்ம நபர்கள் தாக்கி கடத்தி செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி கடத்தல் கும்பல் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    கருங்கல் அருகே வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமானது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் தொழிலாளியை தேடி வருகிறார்கள்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே உள்ள கண்ணன்விளையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). கூலி தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் பல இடங்களில் தேடியும், எங்கும் அவர் கிடைக்கவில்லை. எனவே இது குறித்து அமுதா கருங்கல் போலீசில் புகார் செய்தார். 

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து மாயமான சீனிவாசனை தேடி வருகின்றனர்.
    ×