என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wild"
- அந்தியூர் பர்கூர் மலையில் உணவு தேடி வந்த காட்டுயானை 2வீட்டை சேதப்படுத்தி விட்டு சென்றது.
- இடிந்து வீட்டிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சி மேல் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி மாதம்மாள் (65). இவர்களது மகன் முனியப்பன். மாதம்மாள் தனது மகளுடன் அருகாமையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அதிகாலை இவர்களின் வசிப்பி டத்துக்கு காட்டுயானை உணவு தேடி வந்துள்ளது. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு இவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது தெரியவந்தது. உணவு தேடி வந்த காட்டுயானை இவர்களின் வீட்டை சேதப்படுத்தி விட்டு சென்றது.
இதுகுறித்த தகவலின்பேரில் பர்கூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். உணவு தேடி காட்டுயானை குடியிருப்புக்கு வந்து செல்வது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இடிந்து வீட்டிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர். இதேபோல் அட்டகாசம் செய்யும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
- பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே நேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் திம்பம், தலமலை மற்றும் சுற்று வட்டார வனப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென மதியம் 3 மணி அளவில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது.
பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது. மேலும் திம்பம், காளி திம்பம், தலமலை, பெஜலட்டி, மாவநத்தம் ஆகிய பகுதியில் தொடர்ந்து இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
இதனால் திம்பம் வனப்பகுதிகளில் புதிய அருவிகள் தோன்றியது. அருவிகளில் இருந்து தண்ணீர் கொட்டி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி குய்யனூர் தடுப்பணைக்கு சென்றது. இதனால் தடுப்பணை நிரம்பி வழிந்து சென்றது. தொடர்ந்து அருகே உள்ள ஓடை, குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் சென்று நிரம்பி வருகிறது.
அதேப்போல பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்