என் மலர்
நீங்கள் தேடியது "WindFarm"
- ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம் கிராமத்தில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது.
- தனியாருக்கு சொந்தமான ஒரு காற்றா லையில் மர்மநபர்கள் சிலர் புகுந்து அங்கிருந்த காப்பர் வயர்களை திருடிச்சென்றனர்
நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம் கிராமத்தில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தனியாருக்கு சொந்தமான ஒரு காற்றா லையில் மர்மநபர்கள் சிலர் புகுந்து அங்கிருந்த காப்பர் வயர்களை திருடிச்சென்றனர்.
இதுதொடர்பாக காற்றாலை நிறுவன மேலாளர் ஆறுமுகம் என்பவர் ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காற்றாலையில் ெபாருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் 3 வாலிபர்கள் இரவு நேரத்தில் காற்றாலைக்குள் புகுந்த காட்சி பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் மர்மநபர்களை தேடிவருகின்றனர்.