என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "winning"
- வெற்றிபெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டது
- நீரினைப்பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீர்நிலைகளின் நீரினைப் பயன்படுத்துவோர் 34 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மொத்தமுள்ள 34 தலைவர் இதில் 8 தலைவர்கள் தவிர, மற்ற 26 தலைவர் பதவிகள் மற்றும் 91 உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 8 தலைவர்கள் மற்றும் 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கு நேற்று காலை முதல் வாக்குப்பதிவு விறு, விறுப்பாக நடைபெற்றது. இதில் கல்லாலங்குடி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தல் கடும் பரபரப்புக்கு இடையே இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மாலை நான்கு மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.வாக்குகள் என்னப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் தலைவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
வெற்றி பெற்ற தலைவர்களான விஜயரெகுநாதபுரம் செல்வராசு, குளவாய்பட்டி பானுமதி, மேலாத்தூ ர் குமார், கல்லாலங்குடி பாண்டியன், கொத்தமங்கலம் முத்துத்துரை, மாங்காடு பாலசுப்பிரமணியன், வல்லாத்திராக்கோட்டை, வாண்டாக்கோட்டை, பூவரசகுடி, மணியம்பலம் இவைகளுக்கு கருப்பையா, நம்புகுழி முத்து ஆகிய 8 தலைவர்களாகவும் மற்றும் பத்து உறுப்பினர்கள் என வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருமான முருகேசன் மற்றும் ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி ஆகியோர் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
- முதல் மூன்று இடம் பிடித்த மாணவ -மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
- நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சியில் தமிழக அரசு அறிவித்துள்ள தூய்மை நகர இயக்கம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சியை தூய்மைப்படுத்துவதிலும், நெகிழியை தவிர்ப்பதிலும் பொதுமக்கள் பங்கு என்ற தலைப்பில் சங்கரன்கோவிலில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ -மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் ஜெயபிரியா, சுகாதார அலுவலர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தனர்.இதில் கட்டுரை போட்டியில் வென்சியா, சரண்யா, பொன் சிவராஜன் ஆகியோர் முதலிடமும், தினேஷ், பரத்குமார் பாலசுப்ரமணியன் ஆகியோர் இரண்டாம் இடமும், திருமலைநம்பி, ஹர்சினி, சங்கரநாராயணன் ஆகியோர் மூன்றாம் இடத்தையும்,
ஓவிய போட்டியில் சிவசக்தி, வெள்ளத்துரை, கைலாஷ் முதலிடத்தையும், விக்னேஷ், நாகராஜ், கர்நிதா 2ம் இடத்தையும், சரித்திரா, ஸ்மிர்த்தியா, ராஜஸ்ரீ ஆகியோர் 3 ம் இடத்தையும் பெற்றனர். மேலும் மத்திய அரசின் திறனாய்வு தேர்வில் நகராட்சி பள்ளியில் பயின்று தேர்வு பெற்ற அசினாபேகம், மகாலட்சுமி, ராஜேஸ்வரி உள்ளிட்ட மாணவ- மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், நகர நிர்வாகி மாரிச்சாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மாரிசாமி, வெங்கட்ராமன், மாரிமுத்து, கருப்பசாமி மற்றும் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள், பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வெற்றிப்பெற்ற கர்ணப் புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- 5 புறாக்கள் இறுதி நாள் போட்டிக்கு தகுதி பெற்றன.
கரூர்:
கரூர் நகர நண்பர்கள் நடத்தும் 2-ம் ஆண்டு புறாப்போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மொத்தம் 14 புறாக்கள் பறக்க விடப்பட்டன. குறைந்தப்பட்சம் தொடர்ந்து 4 மணி நேரம் பறக்கவேண்டும். ஒரு முறையேனும் கர்ணம் (டைவ்) அடிக்கவேண்டும். வளர்ப்பாளர் கூறும் குறிப்பிட்ட இடத்தில் அமரவேண்டும் என்ற விதிகள் கடைபிடிக்கப்பட்டன. முதல் நாள் போட்டியில் பங்கேற்ற 14 புறாக்களில் 2ம் நாள் போட்டிக்கு 7 புறாக்கள் தேர்வாகின. 2ம் நாள் போட்டியில் 7 கர்ணப் புறாக்கள் பறக்கவிடப்பட்டதில் 5 புறாக்கள் இறுதி நாள் போட்டிக்கு தகுதி பெற்றன. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் 3ம் நாளான நேற்று புறாக்கள் பறக்கவிடப்பட்டன. இதில் அதிக நேரம் பறந்து முதலிடம் பெற்ற கர்ணப் புறாவின் உரிமையாளர் சின்னசங்கர், 2ம் இடம் பெற்ற உரிமையாளர் ஜெய்நரேந்திரன், 3ம் இடம் பெற்ற கர்ணப் புறாவின் உரிமையாளர் தருண் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- எம்.எஸ்.கே. ஆலங்குளம் அணியினர் முதல் பரிசான சுழற் கோப்பையை தட்டிச் சென்றனர்.
- ஊராட்சி தலைவர் ஐவராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
தென்காசி:
கீழப்பாவூர் அருகே உள்ள திப்பணம்பட்டியில் வி.கே.எஸ் நண்பர்கள் திப்பணம்பட்டி கிரிக்கெட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான 2-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டன. அதன் இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றது.
அதில் வெற்றி பெற்ற எம்.எஸ்.கே. ஆலங்குளம் அணியினர் முதல் பரிசான சுழற் கோப்பையை தட்டிச் சென்றனர். அவர்களுக்கு ரொக்கப்பணம் ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசை திப்பணம்பட்டி வி.கே.எஸ். அணியினர் வென்றனர்.
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கும் விழா திப்பணம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ஐவராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ பிரிவில் நேற்று நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சோனியா லாத்தெர், மொராக்கோ வீராங்கனை டோஜானி டோயாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சோனியா லாத்தெர் 5-0 என்ற கணக்கில் டோஜானி டோயாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அரியானாவை சேர்ந்த 26 வயதான சோனியா லாத்தெர் 2016-ம் ஆண்டு உலக போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2 முறை வெள்ளிப்பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 51 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 4-1 என்ற கணக்கில் அர்மேனியா வீராங்கனை அனுஷ் கிரிகோர்யானை சாய்த்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 64 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவின் அமெலி மூரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.
அதன்படி மாநில சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடுகிறது. முதலில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதன்பின்னர் அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்மீது மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதையொட்டி சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் எடியூரப்பா இன்று ஓட்டலுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெற போதுமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என கூறினார். மேலும், அமைச்சரவையை நாளை கூட்டி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.
ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளது. எனவே, மெஜாரிட்டியை நிரூபிக்க, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என்றும் கூறப்படுவதால் அவர்கள் பா.ஜ.க.விடம் விலைபோயிருக்கலாம் என தெரிகிறது. #KarnatakaCMRace #Yeddyurappa #Karnatakafloortest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்