என் மலர்
நீங்கள் தேடியது "Winter smog"
- மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பனிப்பொழிவு மிக மிக அதிகமாக உள்ளது.
- இனிமழை வருமா? நமது பகுதியில் உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள் எல்லாம் நிரம்புமா ? என்று கவலையில் உள்ளனர்.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பனிப்பொழிவு மிக மிக அதிகமாக உள்ளது.
மாலை 6 மணிக்கு மேல் தலைப்பாகை அல்லது குல்லா பொட்டு தான் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
மேலும் வயதான ஆட்களுக்கு இருமல், தும்மல் என அதிகரித்து வருகிறது. பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மழை பெய்யவே இல்லை, இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்து உள்ளனர்.
இனிமழை வருமா? நமது பகுதியில் உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள் எல்லாம் நிரம்புமா ? என்று கவலையில் உள்ளனர். உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட குளங்கள், குட்டைகள் மற்றும் கருமேனி ஆறுஆகியவை வறண்டு கிடக்கிறது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.