search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "with education"

    • வருகிற 8-ந்தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடைபெற உள்ளன.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 5-ந்தேதியும், காரைக்குடியில் வருகிற 8-ந்தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடைபெற உள்ளன. காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்ட பத்தில் கல்வி கடன் முகாம் நடக்கிறது.

    எனவே கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ- மாணவிகள் www.vidyalakshmi.co.in என்ற இணைய தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்து, முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்ப நகல் மற்றும் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    இந்த முகாம்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும்.

    முகாமில் கலந்து கொள்பவர்கள் விண்ணப்ப நகல், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரின் 2 பாஸ்போர்ட்டு புகைப்படம், வங்கி பாஸ் புத்தகம், இருப்பிட சான்று, வருமான சான்று, ஜாதி சான்று, பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள், நன்னடத்தை சான்று, கல்விக்கட்டண விவரம், மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்று, கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டர் டிசைனிங், பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ) இலவசமாக சேர்ந்து படித்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
    • 2023-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டர் டிசைனிங், பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ) இலவசமாக சேர்ந்து படித்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூலம், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டிங் டிசைனிங் பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் பி.சி.ஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில் பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம் பல்கலைகழகத்தில் இண்டகரேட்டட் மேனேஜ்மெண்ட் பட்டபடிப்பில் சேர்ந்து படித்திடவும் வாய்ப்பு பெற்று தரப்படும்.

    இதற்கான தகுதிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். பிளஸ் 2-ல், 2022-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும்.

    இப்படிப்பிற்கான செலவு தாட்கோ மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்று, வேலை வாய்ப்பு பெற்றால், ஆண்டு சம்பளமாக ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் சம்பள உயர்வும் பெறலாம்.

    இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×