என் மலர்
நீங்கள் தேடியது "with lightning"
- சேலம் டவுன், கிச்சிபாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, உள்பட பல இடங்களில் தாழ்வான இடங்களில் சாக்கடை நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மழையைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 29.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சேலம்:
வங்கக்கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு சேலத்தில் திடீரென மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் டவுன், கிச்சிபாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, தாதம்பட்டி உள்பட பல இடங்களில் தாழ்வான இடங்களில் சாக்கடை நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல புறநகர் பகுதிகளான சங்ககிரி, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன் பாளையம் உட்பட பல பகுதிகளிலும் கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழையைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 29.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சங்ககிரி -19.2, தம்மம்பட்டி-8, கெங்கவல்லி-3, ஏற்காடு-1, காடையாம்பட்டி - 1 என மாவட்டம் முழுவதும் 70.30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்று காலையில் மாவட்டம் முழு வதும் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.