என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "with moped"

    • பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.
    • பர்வதம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் துரைசாமி (67). இவரது மனைவி பர்வதம் (55).

    சம்பவத்தன்று இருவரும் மொபட்டில் தனது பேரன் நலனை ஈங்கூர் அருகே செயல்படும் தனியார் பள்ளியில் விடுவதற்காக சென்னிமலை-பெருந்துறை ரோட்டில் பாலப்பாளையம் பிரிவு அருகே செல்லும் போது ரோட்டினை கடப்பதற்காக மொபட்டை திருப்பி உள்ளார்.

    அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் மொபட் மீது மோதியது.

    இதில் துரைசாமி காயமடைந்தார். அவரது மனைவி பர்வதம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பேரன் நலன் காயமின்றி தப்பினார்.

    இது குறித்து சென்னிமலையினை சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமாரிடம் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன் எதிர்பாராத விதமாக வேலுசாமி வந்த மொபட் மீது மோதியது.
    • கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த வர் வேலுசாமி (வயது 56). இவர் திருமண புரோக்கராக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வேலு சாமி கோபிசெட்டிபாளை யம்- சத்தியமங்கலம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். தொடர்ந்து அவர் லக்கம் பட்டி பிரிவு அருகே சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக வேலுசாமி வந்த மொபட் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலுசாமி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×