என் மலர்
நீங்கள் தேடியது "Wiz"
- அந்நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கிய நிறுவனமாக இருக்கும்.
- 2022-இல் 5.4 பில்லியன் டாலர்கள் கொடுத்து சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தை வாங்கியது.
சைபர்செக்யுரிட்டி நிறுவனமான விஸ் (Wiz)-ஐ கூகுள் நிறுவனம் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட விஸ் நிறுவனம் மிக குறுகிய காலக்கட்டத்தில் அசுர வளர்ச்சியை பெற்றது. இந்நிறுவனத்திற்கு ஆசார் ராப்பப்போர்ட் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கடந்த மே மாத வாக்கில் ஐபிஓ-வுக்கு தயாரான விஸ் நிறுவன மதிப்பீடு 12 பில்லியன் டாலர்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டது.
உலகளவில் நிர்வாகிகள் மற்றும் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்களுக்கு கிளவுட் சார்ந்த சேவைகளை விஸ் வழங்கி வருகிறது. இஸ்ரேலிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களான சைபர்ஸ்டார்ட்ஸ், இன்டெக்ஸ் வென்ச்சர்ஸ், இன்சைட் பார்ட்னர்ஸ் மற்றும் செக்யோவா கேப்பிட்டல் உள்ளிட்டவை விஸ் சேவைகளை பயன்படுத்தி வருகின்றன.
விஸ் நிறுவனத்தை கூகுள் கைப்பற்றும் பட்சத்தில் கூகுள் நிறுவன வரலாற்றிலேயே அந்நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கிய நிறுவனமாக விஸ் இருக்கும். கூகுள் நிறுவனம் முன்னதாக 2022 ஆம் ஆண்டு மாண்டியன்ட் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தை 5.4 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் தொடர்ச்சியாக சைபர் பாதுகாப்பு துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை விலைக்கு வாங்கி வருவது பேசு பொருளாக இருக்கிறது.