என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman commits"

    • மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • சுகன்யா சம்பவத்தன்று பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

    பவானி

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கல்பாவி, பெரியகுரும்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லவேல்.

    இவரது மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்லவேல் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சுகன்யாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது.

    இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லையாம். இதனால் சுகன்யா மன முடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சுகன்யா சம்பவத்தன்று பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

    இதையறிந்த சுகன்யாவின் அக்கா சத்யா அளித்த தகவலின் பேரில் உடனடியாக அவரை அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுகன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பவித்ரா, இருவரையும் தங்களது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
    • இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளேயாவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    பெருந்துறை:

    திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரது மனைவி கவுதமி (22). இருவரும் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் குறித்து மணி கண்டன் தனது பெற்றோ ருக்கு தெரிவிக்கவில்லை யாம்.

    தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில், தங்களது திருமணம் குறித்து மணி கண்டனின் பெற்றோரிடம் தெரிவிக்குமாறு கெளதமி கூறியுள்ளார்.

    இதையடுத்து மணி கண்டன், முதற்கட்டமாக, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வசித்து வரும் தனது சகோதரி பவித்ராவிடம் தங்களது திருமணம் குறித்து தெரி வித்துள்ளார்.

    இதையடுத்து பவித்ரா, இருவரையும் தங்களது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

    அதன்பேரில், மணி கண்டனும் கவுதமியும், பெருந்துறையில் உள்ள பவித்ராவின் வீட்டுக்கு நேற்று வந்துள்ளனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தங்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டது குறித்து பவித்ரா கேட்டதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த கவுதமி பவித்ராவின் வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார்.

    வெகு நேரமாகியும் கவுதமி வெளியில் வராத தால் குளியல் அறை கதவை உடைத்து பார்த்தனர்.

    அங்கு தூக்கில் தொங்கிய கவுதமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், கவுதமி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்து, கவுதமியின் சகோதரர் செல்லதுரை அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும், இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளேயாவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். 

    ×