search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman doctor"

    • மாணவர்கள் நீதி கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • அரசு இயந்திரம் செயல்படவில்லை எனக் கூறி மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

    மேற்குவங்கம் கொல்கத்தா மாநிலத்தில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது. டாக்டர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வற்புறுத்தி வருகிறார்.

    இதற்கிடையே மம்தா பானர்ஜி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜி நோக்கி விரல் நீட்டி குற்றம்சாட்டுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி உதயன் குஹா பேசியது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

    அவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், அவர் பேசிய வீடியோதானா? என்பது அதிகாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியவில்லை.

    அந்த வீடியோவில் "மம்தாவை நோக்கி விரல்களை காட்டி குற்றம்சாட்டி வருகிறார்கள். அதேபோல் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இது ஒருபோதும் வெற்றியடையாது. மம்தா நோக்கி யார் விரல் நீட்டுகிறார்களோ? அவர்களுடைய விரல்கள் உடைக்கப்படும்" என பேசியுள்ளார்.

    டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஆகஸ்ட் 15-ந்தேதி ஒரு கும்பல் திடீரென மருத்துவமனையின் எமர்ஜென்சி டிப்பார்ட்மென்ட், மெடிக்கல் ஸ்டோர் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினர். அசாதாரண நிலை ஏற்பட்ட போதிலும் போலீசார் தடியடி நடத்திவில்லை.

    "வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் வன்முறை நடைபெற்றது. இன்னொரு வங்கதேசம் போன்று திரும்ப நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த போராட்டத்தை சாக்குபோக்காக வைத்து வீட்டிற்கு செல்ல அல்லது நண்பர்களுடன் நேரத்தை செலவிட பயன்படுத்தி அதனால் ஒரு நோயாளி இறந்தால், ஸ்டிரைக் காரணமாக மக்கள் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். அப்போது நாங்கள் உதவமாட்டோம் என அவர் பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

    • பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது
    • சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.

    மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய். கடந்த 8-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரைக் பலாத்காரம் கொலை செய்துள்ளான்.

    சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் என்று மேற்குவங்க பாஜகவினர் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மேற்குவங்க போலீசார் கைது செய்யவேண்டும் இல்லையென்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    • சஞ்சய் அணிந்திருந்த காலனிகளில் ரத்தகரைகள் படிந்திருந்ததை சோதனையின் போது கண்டு பிடித்ததாகவும் போலீசார் கூறினர்.
    • சஞ்சய் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை  பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.

     

     

    மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய். கடந்த 8-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரைக் பலாத்காரம் கொலை செய்துள்ளான்.

    சம்பவத்தன்று அதிகாலையில் அவன்  மருத்துவமனைக்குள் நுழைந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் ராயைப் பிடித்து விசாரித்த போது அவர் பெண் மருத்துவரைக் கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    முதல் கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பெண் டாக்டரின் கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் இருந்து ரத்தம் கொட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இடது கால், வலது கை, மோதிர விரல் மற்றும் உதடுகளிலும் காயங்கள் இருந்ததாக கூறப் பட்டுள்ளது.

     

    இந்நிலையில் கைதான சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கொலை செய்த பிறகு சஞ்சய் ராய் மீண்டும் தான் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று மறுநாள் காலை வெகுநேரம் வரை தூங்கி உள்ளான்.

    பின்னர் எழுந்ததும் தடயங்களை அழிக்க முடிவு செய்து, கொலை செய்த போது தான் அணிந்திருந்த ஆடைகளைத் துவைத்ததாக போலீசார் தெரிவித்தனர். சஞ்சய் அணிந்திருந்த காலனிகளில் ரத்தகரைகள் படிந்திருந்ததை சோதனையின் போது கண்டு பிடித்ததாகவும் போலீசார் கூறினர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இறுதி பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம், சம்பவம் நடந்த அன்றைய இரவு பணியிலிருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி சி.சி.டி.வி. காட்சிகளையும் சரிபார்த்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பில் ஈடுபட்ட மேலும் ஒரு பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர். #WomanDoctor #Arrested
    போளூர்:

    திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ததாக போலி டாக்டர் ஆனந்தி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் நடத்தி வந்த ஸ்கேன் சென்டர் மற்றும் ஆனந்தியின் வீட்டுக்கு சீல் வைத்தனர். சொத்து, வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போளூரில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் டாக்டர் ஒருவர் சிக்கி உள்ளார்.

    கலசபாக்கம் அருகே உள்ள கடலாடியை சேர்ந்த 27 வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார். அதனால் அந்த பெண் கர்ப்பமானார்.

    இதையடுத்து அந்த பெண் போளூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கருவை கலைத்து உள்ளார். அந்த மருத்துவமனையில் பலருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு புகார் வந்தன.

    இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர், போளூர் மாஜிஸ்திரேட்டு தாமோதரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெகநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், வருவாய்த் துறையினர், போலீசார் போளூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மருத்துவமனையின் டாக்டர் சுகந்தி என்பவர் மருத்துவமனையில் எந்த பதிவேடுகளும் முறையாக பாராமரிக்காதது தெரியவந்தது. மேலும் அவர் திருமணமாகாத கர்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக மாத்திரை, மருந்து மூலம் கருக்கலைப்பு செய்ததும், உரிய மருத்துவ நடைமுறைகளை பின்பற்றாமல் ஊழியர்களை வைத்து சிகிச்சை அளித்து வந்ததும், எந்தவித கணக்கு வழக்குகளும் இல்லாமல் மருத்துவமனை நடத்தி வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட டாக்டர் சுகந்தியை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சுகந்தியை போளூர் போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவர் சிகிச்சை முடிந்து வெளியே வந்ததும் அவரிடம் விசாரணை நடத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படித்துள்ள டாக்டர் கருக்கலைப்பு புகாரில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #WomanDoctor #Arrested


    பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதால் மனமுடைந்த அரசு பெண் டாக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் விஜயகுமார் (வயது 30). ஸ்டுடியோ உரிமையாளர். இவர், கடந்த புதன்கிழமை தனது மனைவி ஜோதியை (27) அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவுக்கு வந்தார்.

    பணியில் இருந்த மகப்பேறு டாக்டர் பவானியிடம் சென்று தங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளது. மீண்டும் கருவுற்றுள்ள தனது மனைவிக்கு கருக்கலைப்பு செய்யுங்கள் என்று விஜயகுமார் கூறினார். அதற்கு, கருக்கலைப்புடன் சேர்த்து குடும்ப கட்டுப்பாடும் செய்து கொள்ளுங்கள் என டாக்டர் பவானி கூறினார்.

    இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜய குமார், வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் டாக்டர் பவானியின் போட்டோவை ஆபாசமாக பதிவிட்டு அவதூறான தகவல் பரப்பினார். இந்த தகவலுக்கு விஜயகுமார் நண்பர்கள் பலர் பதிலளித்து ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டது பெண் டாக்டர் பவானிக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் டாக்டர் பவானி அளித்த புகாரின்பேரில், விஜயகுமார் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் ஒன்றுகூடி விஜய் குமாரின் கருத்துக்கு பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்து பதிவிட்டவர்களில் குறைந்தது 10 பேரையாவது கைது செய்ய வேண்டும்.

    அவர்கள் மீது மருத்துவமனை மருத்துவர்கள் பணி பாதுகாப்பு சட்டம் 48-ன் கீழ் வழக்குப்பதிய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முன்தினம் போராட்டம் செய்தனர். தொடர்ந்து 2 நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.

    போராட்டத்தை கைவிடவில்லை என்றால் டாக்டர்கள் மீது துறை ரீதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்லூரி டீன் நடராஜன் எச்சரித்தார். மேலும், உரிய சிகிச்சை பெற முடியாமல் தவித்த நோயாளிகளுக்கு டீன் மற்றும் சீனியர் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    தன்னை பற்றி அவதூறு பரப்பியதால் மனமுடைந்த நிலையில் இருந்த டாக்டர் பவானி இன்று அதிகாலை தனது வீட்டில் அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர் பவானி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    டாக்டர் தற்கொலை முயற்சியால் அதிர்ச்சியடைந்த சக டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்புக்குள்ளாகினர்.

    தற்கொலைக்கு முயன்ற பெண் டாக்டர் பவானிக்கு 31 வயதாகிறது. இவருடைய கணவர் சூரியபிரகாஷூம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் மனைவிக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்த டாக்டரின் போட்டோவை பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஜோதி 3-வது முறையாக கர்ப்பமடைந்துள்ளார்.

    அந்த கர்ப்பத்தை கலைக்க விஜயகுமார் மனைவியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். புறநோயாளிகள் பிரிவில் இருந்த பெண் டாக்டர் பவானியை சந்தித்தனர்.

    டாக்டரிடம், எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். 3வது குழந்தை வேண்டாம். கருவை கலைத்து விடுங்கள் என்றனர். டாக்டர் பவானி கருக்கலைப்பு சட்ட விரோதம். கருக்கலைப்பு செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், டாக்டர் பவானியிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். எங்கு சென்று கருக்கலைப்பு செய்தாலும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர் பவானி எச்சரித்தார்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த விஜயகுமார், தனது செல்போனில் டாக்டர் பவானியை போட்டோ பிடித்து அதை பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாக எழுதி பதிவிட்டார். மேலும் டாக்டர் பவானி குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பினார்.

    இதையறிந்த டாக்டர் பவானி, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய குமாரை கைது செய்தனர்.
    ×