search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman falling"

    புதுவை இந்திராகாந்தி சிக்னலில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை அபிஷேகப் பாக்கத்தை சேர்ந்தவர் சிவ பூ‌ஷணம். இவரது மனைவி அஞ்சலை (வயது 55). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.

    சிவபூ‌ஷணம் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அஞ்சலை புதுவை கோரிமேட்டில் உள்ள அரசு பல் ஆஸ்பத்திரியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தினமும் வேலைக்காக அவர் அபிஷேகப்பாக்கத்தில் இருந்து பஸ்சில் வருவது வழக்கம். அதே போல் இன்று மடுகரையில் இருந்து தவளக்குப்பம் வழியாக புதுவைக்கு ஒரு தனியார் பஸ் வந்தது.

    அபிஷேகப்பாக்கத்தில் இருந்து அவர் பஸ்சில் ஏறினார். பஸ் இந்திராகாந்தி சிலை அருகே வந்த போது சிக்னல் விழுந்து விட்டதால் பஸ் வேகமாக வளைந்து திரும்பியது.

    அப்போது பஸ்சில் இருந்து அஞ்சலை திடீரென தவறி பஸ்சின் வெளியே ரோட்டில் கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆட்டோவில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது.

    இது குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, போலீஸ்காரர் ரவிகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரளம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள திருமெஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் துரை. விவசாயி. இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 55).

    துரை நேற்று மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி முள்வேலியில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அமிர்தவல்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். துரை காயமின்றி தப்பினார்.

    இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் பேரளம் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×