என் மலர்
நீங்கள் தேடியது "woman girl killed"
- இன்று காலை கார்த்திகா தனது கணவர் சின்னராசுவின் அண்ணன் மகள் சாய் தனியா (5) என்பவருடன் மொபட்டில் வள்ளியூரில் இருந்து கேசவநேரிக்கு சென்று கொண்டிருந்தார்.
- சிறுமி சாய் தனியா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவநேரியை சேர்ந்தவர் சின்னராசு. இவரது மனைவி கார்த்திகா ( வயது 20).
கார் மோதல்
இன்று காலை கார்த்திகா தனது கணவர் சின்னராசுவின் அண்ணன் மகள் சாய் தனியா (5) என்பவருடன் மொபட்டில் வள்ளியூரில் இருந்து கேசவநேரிக்கு சென்று கொண்டிருந்தார்.
வள்ளியூர் நான்கு வழிச்சா லையை கடக்கும்போது நாகர்கோவிலில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்தது. திடீரென அந்த கார் கார்த்திகாவின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார்த்திகா, சாய் தனியா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
பரிதாப சாவு
இதில் படுகாயம் அடைந்த கார்த்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி சாய் தனியா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வள்ளியூர் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்திகா உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுமி சாய் தனியா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காரை ஓட்டி வந்த அமீர் என்பவர் மீது வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
