என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "woman inspector"
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன் உசைன் முகமது, சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண், தனக்கு வயிறு மிகவும் வலிப்பதாக கூறி உதவி கேட்டுள்ளார்.
உடனே, இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன், அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் 6 மாதம் 5 நாட்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். அவரது ஆடையில் ரத்தம் சிந்தியிருந்ததைப் பார்த்து பதறிப்போன இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன், உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.
அத்துடன், அங்குள்ள பரிசோதனை அறைக்கு அந்த கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்று தரையில் படுக்க வைத்து அவருக்கு முதலுதவி செய்தார். அப்போது அவருக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. கர்ப்பப் பையில் இருந்து குழந்தை வெளியேற ஆரம்பித்தது.
இனியும் தாமதித்தால் தாயின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கார்பரல் ஹனன், பிரசவம் பார்த்துள்ளார். தலை திரும்பிய நிலையில், கர்ப்பப் பையை விட்டு வெளியே வராமல் இருந்த குழந்தையை லாவகமாக வெளியே எடுத்துள்ளார். பின்னர் மருத்துவர்கள் வந்து தொப்புள் கொடியை துண்டித்து, தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முதலில் குழந்தையின் முதுகில் தட்டினேன், அப்போதும் அழவில்லை. பின்னர் குழந்தையின் மார்புக்கு சற்று அழுத்தம் கொடுத்து இதயத்துடிப்பை ஏற்படுத்த முயற்சி செய்தேன். இதனால் சிறிது நேரத்தில் குழந்தை அழத் தொடங்கியது. என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தையின் இனிமையான குரலைக் கேட்ட பிறகுதான் நிம்மதி ஏற்பட்டது” என்றார்.
சரியான நேரத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு, தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டரின் உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது செயலைப் பாராட்டி துபாய் காவல்துறை சான்றிதழ் வழங்கி கவுரவித்தது. #DubaiCop #DeliverAtAirport
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் புதுவளைவு பகுதியை சேர்ந்த ஆசைதம்பி மகன் ஜெயச்சந்திரன் (வயது 35). திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தென்பறையை சேர்ந்தவர் தமிழ்மாறன். இவர்கள் 2 பேரும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்தனர். இது தொடர்பாக அவர்களுக்கிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் தமிழ்மாறன் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தனது உறவினரும் போலீஸ் அதிகாரியுமான ஒருவர் மூலம் பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் ஜெயச்சந்திரன் மீது புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, ஏட்டு சதீஷ் ஆகியோர் ஜெயச்சந்திரனை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்து உள்ளனர். அப்போது ஜெயச்சந்திரனை தாக்கி அவரது செல்போனை பறித்து வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீஸ் நிலையம் சென்ற ஜெயச்சந்திரன் நீண்ட நேராமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ஆசைதம்பி மற்றும் உறவினர்கள் பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்கு வந்து பார்த்த போது ஜெயச்சந்திரனை போலீசார் தாக்கி செல்போனை பறித்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக ஜெயச்சந்திரனை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய போவதாக ஜெயச்சந்திரனின் உறவினர்கள் தெரிவித்தனர். போலீஸ் நிலையத்தில் வாலிபரை விசாரணைக்கு அழைத்து இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மது விலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருபவர் சுகுணா (வயது 45).
இவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாகை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து நாகை ஆயுதப்படை பணிக்கு இன்ஸ்பெக்டர் சுகுணா சென்றார்.
இந்த நிலையில் நேற்று இரவு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்ஸ் பெக்டர் சுகுணா இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீசார் அவரை மீட்டு நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் சுகுணா ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும், மேலும் பணிசுமை காரணமாக அதிகளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் பரவியது. இது போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாகை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இன்ஸ்பெக்டர் சுகுணா வீடு திரும்பினார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘‘ பணிசுமை காரணமாக தூக்க மாத்திரை தின்றதாக கூறப்படுவது தவறு. எனக்கு குறைந்த ரத்த அழுத்தம் உள்ளது. இதனால் எனக்கு சிறிது சோர்வு ஏற்பட்டதில் மயங்கி விழுந்தேன். வேறொன்றும் சொல்வதிற்கு இல்லை’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்