என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman minister"

    • ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
    • சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு 6 வழக்குகளை பதிவு செய்து கலவரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    இம்பால்:

    பா.ஜனதா ஆட்சி நடை பெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதம் 3-ந் தேதி பெரும் கலவரம் ஏற்பட்டது.

    மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவே இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாகும்.

    மணிப்பூர் முழுவதும் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு அங்கு மீண்டும் கலவரம் ஏற்பட்டது. ஒரு கிராமத்தின் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர்.

    இம்பால் மேற்கு மாவட்டத்தில் சாம்பெல் பகுதியில் அமைந்துள்ள குகி சமூக பெண் மந்திரியான நேம்சா கிப்ஜெனின் வீட்டுக்கு மர்ம கும்பல் நேற்று இரவு தீ வைத்தனர்.

    இந்த சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லை. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மணிப்பூர் மந்திரிகளில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் மந்திரி இவர் ஆவார்.

    பெண் மந்திரியின் வீட்டுக்கு தீ வைத்த கும்பலை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

    மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 110-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 310 பேர் காயம் அடைந்தனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

    வன்முறை சம்பவம் தொடர்பாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு 6 வழக்குகளை பதிவு செய்து கலவரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    • லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
    • நீதி மந்திரி தலைமையிலான ஆணையத்தின் நிர்வாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

    லிபியா நாட்டின் வெளியுறவுத் துறையின் பெண் மந்திரியாக இருப்பவர் நஜ்லா அல்-மங்குஷ். இவர் சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இஸ்ரேலின் வெளியுறவுத் துறை மந்திரி கோஹனை சந்தித்து பேசினார். இது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாகும். இதில் லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இதற்கு லிபியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பெண் மந்திரி நஜ்லாவை சஸ்பெண்டு செய்து பிரதமர் அப்துல் ஹமித உத்தரவிட்டுள்ளார். நீதி மந்திரி தலைமையிலான ஆணையத்தின் நிர்வாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான லிபிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ரோமில் நடந்தது ஒரு அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாகும். பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக லிபியாவின் நிலைப்பாட்டை மந்திரி மீண்டும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பை ஒரு பேச்சுவார்த்தைக்காக முன்வைக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது என்று கூறியுள்ளது.

    • ஹெப்பல்கருக்கு எதிராக சி.டி.ரவி பலமுறை இழிவான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
    • கைதுக்கு ஒத்துழைக்காத சி.டி.ரவியை சட்டசபை வளாகத்தில் வைத்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச்சென்றது.

    பெண் அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

    மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துகள் குறித்து கர்நாடக சட்டசபையில் வாதங்கள் நடைபெற்றது.

    சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் ஹெப்பல்கருக்கு எதிராக முன்னாள் பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி பலமுறை இழிவான வார்த்தையை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. லட்சுமி ஹெப்பால்கரின் நடத்தை மற்றும் கற்பை குறை கூறும் கடுஞ்சொல்லை சிடி ரவி தனது  பேசியதாக கூறப்படுகிறது.

    அமைச்சரின் புகாரின் பேரில் சி.டி.ரவி மீது சட்டப்பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் சட்டப்பிரிவு79 (பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதுக்கு ஒத்துழைக்காத சி.டி.ரவியை சட்டசபை வளாகத்தில் வைத்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச்சென்றது.

    கைது செய்யப்பட்டதற்குப் பின் வெளியான வீடியோ பதிவு ஒன்றில், காங்கிரஸ் அரசு தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், போலீஸ் காவலில் சித்திரவதைக்கு உள்ளானதாகவும் சி.டி.ரவி கூறினார்.

    சி.டி.ரவி கைது செய்யப்பட்டதற்கு எதிராக பெங்களூரு, சிக்மகளூர், பெலகாவி ஆகிய இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் அவருக்கு நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வெளியே வந்த அவர், சிறையில் தன்னை பயங்கரவாதி போல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

     

    ×