search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Achievement"

    • எம்பிராயிடிங்கில் பல்வேறு வடிவங்களில் இதயத்தை வரைந்து பெண்கள் சாதனை படைத்தனர்.
    • ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிர மணியன் செய்திருந்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நோபிள் உலக சாதனை புத்தகம் சார்பில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம்பிராயிடிங்கில் இதயத்தை வரைந்து அதன் நடுப்பகுதியில் பல்வேறு விதமான டிசைன்களை எம்பிராய்டிங் செய்து உலக சாதனை நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதில் மதுரை, திருமங்க லம், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களை சேர்ந்த 10 வயது முதல் 60 வயது வரையிலான 100 பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு போட்டி நேரமாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு 'ஆரி வொர்க்' மூலமாக இதயம் வரைந்து மற்றும் அதன் நடுவே பல்வேறு வடிவங்களில் வரைய வேண்டும் என தெரிவிக்கப் பட்டது.

    அதில் இதயம் தொடர் பாக பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என்ற விதிமுறை யில் உலக சாதனை நிகழ்ச்சி தொடங்கியது. காலை 10.39 மணிக்கு போட்டி தொடங்கி யது. நடுவர்களாக டாக்டர் அரவிந்த், ஹேமநாத் இருந்து சாதனை நிகழ்ச்சியை நடத்தினர். அறிவிக்கப்பட்ட 1 மணி நேரத்திற்குள் அனைத்து போட்டியாளர்க ளும் உலக சாதனை நிகழ்ச்சியை நிறைவு செய்த னர். இவர்களில் முதல் 10 இடம் பெற்ற பெண்களுக்கு சிறப்பு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட 100 பெண்களும் முதல்முறை யாக உலகசாதனை நிகழ்ச் சியை 1 மணி நேரத்திற்குள் முடித்ததால் இவர்கள் அனைவரின் சாதனையும் நோபிள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

    வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப் பட்டது. போட்டி ஏற்பாடு களை சிற்பி ஆரி எம்பிரா யிடிங் தலைவர் ராஜ ராஜேஸ்வரி, ஒருங்கி ணைப்பாளர் பாலசுப்பிர மணியன் செய்திருந்தனர்.

    பெண்ணடிமை எனும் விலங்கை உடைத்து எறிந்து இன்றைய நாகரீக உலகின் பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
    பெண்ணடிமை எனும் விலங்கை உடைத்து எறிந்து இன்றைய நாகரீக உலகின் பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். பெண்ணடிமை என்ற இரும்பு கூண்டிலிருந்து இன்றைய பெண்கள் சுதந்திர பறவைகளாக சிறகடித்து பறக்கின்றனர். காவல்துறை, சட்டத்துறை, அரசியல், தகவல் தொடர்பு துறை உள்பட அனைத்து துறைகளிலும் இன்று பெண்கள் பெரிய பதவிகளை வகித்து திறம்பட செயல்படுகின்றனர்.

    மருத்துவ துறையிலும் பெண்கள் வியக்கத் தக்க சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்தியாவை வழிநடத்திய பிரதமர் பதவியில் இந்திரா காந்தி இருந்திருக்கிறார். பல பெண்கள் முதல்-அமைச்சர் நாற்காலியை அலங்கரித்து இருக்கிறார்கள். இருந்து கொண்டும் இருக்கிறார்கள். விண்வெளிக்கு சென்ற கல்பனா சாவ்லா இந்திய வம்சா வளியை சேர்ந்தவர் தான்.

    போக்குவரத்து துறையிலும் பெண் ஓட்டுனர்கள் வந்து விட்டனர். விளம்பர துறையிலும் பெண்கள் நல்ல நிலையை அடைந்து உள்ளனர். உலக அழகிப்போட்டியிலும் இந்திய பெண்கள் மகுடம் சூடி இருக்கிறார்கள். குடும்ப பெண்கள் தங்கள் வீட்டு கடமைகளை முடித்துவிட்டு பகுதிநேர வேலைக்கு சென்று கணவரின் கஷ்டத்தில் பங்கெடுக்கின்றனர். வேளாண்மை துறையிலும் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுபோல பல துறைகளில் பெண்களின் முன்னேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படிப்பிலும் மாணவிகள் முதலிடத்தை பிடித்து ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்து வருகின்றனர். விளையாட்டு துறைகளிலும் பெண்கள் பங்கேற்று இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்று தந்துள்ளார்கள். அதேபோல மாணவ சமுதாயத்தை சேர்ந்த நாமும் நல்ல முறையில் படித்து தாய், தந்தையருக்கும், தாய் நாட்டுக்கும் பெருமை சேர்ப்போமாக.

    ×