search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women MPs"

    • மேற்கு வங்காளத்தில் இன்று தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் அங்கு பேரணி நடைபெறுகிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் இளைஞர் காங்கிரஸ் சார்பில் 1993-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதனை நினைவுகூரும் வகையில் தியாகிகள் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

    கொல்கத்தா நகரில் எஸ்பிளனேடு பகுதியில் தர்மதலா என்ற இடத்தில் நடக்கும் பேரணியில் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்தப் பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:

    தேர்ந்தெடுக்கப்பட்ட 38 சதவீத பெண் எம்.பி.க்களைக் கொண்ட ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே.

    தேர்தலுக்கு முன் அரசியலில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறினர்.

    ஆனால் அதை செய்ய முடியவில்லை. 38 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த ஒரே கட்சி நாங்கள்தான் என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தோ்தலில் 797 பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
    • பெண் எம்.பி.க்களின் விகிதம் 13.44 சதவீதத்துக்கும் மேலாகும்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு பாராளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை பெண்களுக்கு ஒதுக்க வழிவகுக்கும் மகளிா் இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது.

    இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத்தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது. எனினும் அந்த சட்டம் அமலுக்கு வரவில்லை.

    இந்த நிலையில், 18-வது பாராளுமன்ற தோ்தலில் 797 பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் அதிகபட்சமாக பா.ஜ.க. சாா்பில் 69 பெண்கள் போட்டியிட்டனா். அவா்களில் 30 போ் வெற்றிபெற்றனா். காங்கிரஸ் சாா்பில் 41 பெண்கள் போட்டியிட்ட நிலையில், அவா்களில் 14 போ் வெற்றி பெற்றனா்.

    இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் சாா்பில் 11 பெண்கள், சமாஜவாடி சாா்பில் 4 பெண்கள், தி.மு.க. சாா்பில் 3 பெண்கள், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்) சாா்பில் தலா 2 பெண்கள் வெற்றி பெற்றனா்.

    18-வது பாராளுமன்றத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மொத்த எம்.பி.க்களில் பெண் எம்.பி.க்களின் விகிதம் 13.44 சதவீதத்துக்கும் மேலாகும். எனினும், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தோ்தலில் 78 பெண்கள் எம்.பி.க்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சற்று சரிந்துள்ளது.

    ×