என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "women wrestlers"
- பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது.
- இந்த முறை பாஜக சார்பில் அவருக்கு ஏன் எம்.பி சீட் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு சிரித்தவாறே பிரிஜ் பூஷன் சிங், தனது மகனுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பெண் மல்யுத்த வீரர்கள் தொடுத்த கிரிமினல் வழக்கில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் டெல்லி ரோஸ் அவன்யூ மாவட்ட நீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் இணை குற்றவாளியும் முன்னாள் WFI உதவி செயலாளருமான வினோத் தோமர் மீதும் மிரட்டல் குற்றச்சாட்டையும் நீதிமன்றம் பதிவு செய்தது.
இதுகுறித்து கருது தெரிவித்துள்ள பிரிஜ் பூஷன், இது அனைத்தும் தன் மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றும் தான் நிரபராதி என்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த முறை பாஜக சார்பில் அவருக்கு ஏன் எம்.பி சீட் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு சிரித்தவாறே பிரிஜ் பூஷன் சிங், தனது மகனுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக எம்.பி.யாக இருந்த சிங் மீதான பாலியல் புகார்களை அடுத்து அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. அக்கட்சி அவரது மகன் கரண் பூஷன் சிங்கை அந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது.
- டெல்லி போலீசார் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருந்தனர்.
- இந்திய மல்யுத்த சம்மேளன சீர்திருத்தம் குறித்து வாக்குறுதி அளித்தபடி தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளன.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண்சிங் உள்ளார்.
பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் பாலியல் புகார் கூறி இருந்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தாலும் கைது செய்யவில்லை.
இதைத்தொடர்ந்து பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற அவர்களை நடத்திய விதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேச்சு வார்த்தைக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி போலீசார் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருந்தனர். இதேபோல இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கும் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக கடந்த 5 மாதம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீராங்கனைகள் இனி தெருவில் போராட்டத்தில் ஈடுபட போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் சட்ட போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.
வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் இதுதொடர்பாக டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வாக்குறுதியை அரசு நிறைவேற்றியுள்ளது. எனவே நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் தொடரும். ஆனால் எங்கள் போராட்டம் இனி தெருவில் இருக்காது சட்ட போராட்டம் தான் நடைபெறும்.
இந்திய மல்யுத்த சம்மேளன சீர்திருத்தம் குறித்து வாக்குறுதி அளித்தபடி தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளன. ஜூலை 11 தேர்தல் தொடர்பாக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை காத்திருப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு கவுகாத்தி கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
- மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சந்தித்தனர்.
- ஜூன் 15-ம் தேதி வரை எவ்வித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என சாக்ஷி மாலிக் கூறினார்.
புதுடெல்லி:
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை சந்தித்த பிறகு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாசெய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுகிறது. ஜூன் 15ம் தேதிக்குள் போலீஸ் விசாரணை முடிவடையும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி உள்ளோம், அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.
பாலியல் புகாரில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் 15-ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீதான விசாரணை நிறைவு பெறும். ஜூன் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும்.
ஜூன் 15-ம் தேதி வரை எந்தவித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என கூறினார்.
- போராட்டம் காரணமாக பிரிஜ்பூஷன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
- பிரிஜ்பூஷன் சிங்கின் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
புதுடெல்லி:
பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.
ஒரு மைனர் உள்பட 7 வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும், டெல்லி போலீசார் அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினிஷ் போகத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் தொடர் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போராட்டம் காரணமாக பிரிஜ்பூஷன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. அவர் மீதான இரண்டு வழக்குகளில் ஒன்று போக்சோ சட்ட வழக்காகும்.
இதற்கிடையே மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். இதன் பிறகு பிரிஜ்பூஷன் சிங்கின் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அவ ரது உதவியாளர்கள், பணியாளர்கள் என 12 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனையுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் நேற்றிரவு வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. நான் மீண்டும் அவர்களுக்கு இது தொடர்பாக அழைப்பு விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The government is willing to have a discussion with the wrestlers on their issues.
— Anurag Thakur (@ianuragthakur) June 6, 2023
I have once again invited the wrestlers for the same.
மத்திய அரசின் இந்த அழைப்பு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாக்ஷி மாலிக் கூறும் போது "மத்திய அரசின் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். தங்கள் தரப்பில் அனைவருக்கும் சம்மதம் என்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்வோம்" என்றார்.
இதற்கிடையே மத்திய அரசின் அழைப்பை தொடர்ந்து பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்தும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பிரிஜ்பூஷன் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனுராக் தாக்கூரிடம் வலியுறுத்தினார்கள்.
- ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் மெழுகுவத்தி ஏற்றி போராட்டம்
- னைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலக்குழு உறுப்பினர் முரளி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், பா.ஜனதா எம்.பி பூஷன் சரண் சிங்கை போக்சோ சட்டப்படி கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் சார்பில் சிவாஜி சிலை அருகில் மெழுகுவத்தி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தின் புதுவை மாநிலத் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் சுசி கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் லெனின் துரை, ஏ.ஐ.யு.டி.யு.சி மாநில செயலாளர் சிவக்குமார், இணைச்செ யலாளர் சிவசங்கர், ஹரிஷ், சத்யா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தேவசகாயம், பெரியாரின் பொதுவுடமை கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலக்குழு உறுப்பினர் முரளி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்