search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Asia Cup 2024"

    • அதிரடியாக விளையாடிய மந்தனா 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    தம்புல்லா:

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மந்தனா ஆகியோர் களமிறங்கினர். மந்தமாக விளையாடிய ஷபாலி வர்மா 19 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமா செத்ரி 9, கவூர் 11 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்தினார். அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா 60 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ரிச்சா கோஷ் மற்றும் பூஜா அதிரடியாக விளையாடினர். இதனால் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • 7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ளது.
    • டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    தம்புல்லா:

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியாவும், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன.

    இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ளது. அதே சமயம் ஏற்கனவே இறுதி சுற்றில் 5 முறை இந்தியாவிடம் உதை வாங்கியுள்ள இலங்கை அணி அதற்கு பழிதீர்த்து முதல்முறையாக பட்டம் வெல்வதற்கு தீவிரம் காட்டுகிறது.

    எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

    • முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் எஸ்டபிள்யூ பேட்ஸ் உள்ளார்.
    • கவூர் 3415 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.

    இதன் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஷபாளி வர்மா 26 ரன்னிலும் மந்தனா 55 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா 55 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் மந்தனா 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனையான எம் லெனிங்கை (3405) மற்றும் கவூர் (3415) ஆகியோரை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை மந்தனா பிடித்துள்ளார். இந்த பட்டியலின் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் எஸ்டபிள்யூ பேட்ஸ் உள்ளார். அவர் 162 போட்டிகளில் விளையாடி 4348 ரன்கள் குவித்து யாரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார்.

    • வங்காளதேசம் தரப்பில் நிகர் சுல்தானா 32 ரன்கள் எடுத்தார்.
    • இந்திய தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் இன்று 2 அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

    முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா - வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க வீராங்கனைகளாக திலாரா அக்டர்- முர்ஷிதா காதுன் களமிறங்கினர். முதல் ஓவரில் அக்டர் 6 ரன்னிலும் 3-வது ஓவரில் முர்ஷிதா 4 ரன்னிலும் அடுத்து வந்த இஷ்மா தன்ஜிம் 8 ரன்னிலும் ரேணுகா சிங் பந்து வீச்சில் வெளியேறினர்.

    இதனை தொடர்ந்து ருமானா அகமது 1, ரபேயா கான் 1, ரிது மோனி 5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோர் 50 கடக்க உதவினார்.

    தொடர்ந்து விளையாடிய அவர் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்களாதேசம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களில் பட்டியலில் 4-வது இடத்தில் மந்தனா உள்ளார்.
    • இந்த போட்டியில் 37 ரன்கள் எடுத்தால் அவர் 2-வது இடத்துக்கு முன்னேறுவார்.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளன.

    இதன் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். அந்த வகையில் இந்த போட்டியில் மந்தனா (3378) 27 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீராங்கனையான எம் லெனிங்கை (3405) பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடிப்பார்.

    மேலும் 37 ரன்கள் எடுத்தால் சக அணி வீராங்கனையாக கவூரை (3415) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை மந்தனா பிடிப்பார். இந்த பட்டியலின் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் எஸ்டபிள்யூ பேட்ஸ் உள்ளார். அவர் 162 போட்டிகளில் விளையாடி 4348 ரன்கள் குவித்து யாரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார்.

    ×