என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Commission"

    • திரைப்படங்களில் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக அருவருப்பாக காட்டுவது சரியல்ல.
    • தெலுங்கு திரையுலகில் இயக்குனர்கள், பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும்.

    தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை, 'ஐட்டம் சாங்' எனப்படும் கவர்ச்சி குத்தாட்ட பாடல் படங்களில் தற்போது கட்டாயம் இடம்பெற்று வருகிறது. இதற்கு பெரிய சம்பளத்தில் முன்னணி நடிகைகளும் குத்தாட்டம் போட்டு வருகிறார்கள். 'ரங்கஸ்தலம்' படத்தில் பூஜா ஹெக்டே ஆடிய 'ஜிகிலு ராணி...', 'புஷ்பா' படத்தில் சமந்தா ஆடிய 'ஓ சொல்றியா மாமா...', 'புஷ்பா-2' படத்தில் ஸ்ரீலீலா ஆடிய 'சப்புனு அரைவேண்டா...', 'டாக்கு மகாராஜ்' படத்தில் ஊர்வசி ரவுத்தேலா ஆடிய 'தபிடி திபிடி...' போன்ற பல பாடல்களை உதாரணமாக சொல்லலாம்.

    சமீபத்தில் 'ராபின்ஹூட்' படத்தில் 'அதி தான் சர்ப்பிரைஸ்...' பாட்டுக்கு கெட்டிகா ஷர்மா போட்ட ஆட்டம் அனைவரையுமே திரும்பி பார்க்க வைத்தது. மந்திரித்து விட்ட கோழிபோல் இளைய தலைமுறை ரசிகர்கள் அந்த பாட்டை 'ரிப்பீட்' மோடில் பார்த்து வருகின்றனர்.

    இப்படி படுகவர்ச்சி நடனத்தால் தெலுங்கு திரையுலகம் வசூலை வாரி குவித்து வந்த நிலையில், அதற்கு தெலுங்கானா மாநில மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'திரைப்படங்களில் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக அருவருப்பாக காட்டுவது சரியல்ல. தெலுங்கு திரையுலகில் இயக்குனர்கள், பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும். அதையும் மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால், அரவிந்த் கெஜ்ரிவாலின் பி.ஏ பிபவ் குமார், இன்று காலை தன்னை தாக்கியதாக போலீசிடம் முறையிட்டார்.
    • இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் (பி.ஏ) பிபவ் குமார், இன்று காலை கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து தன்னை தாக்கியதாக டெல்லி போலீசிடம் முறையிட்டார்.

    இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து முதற்கட்ட அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி காவத்துறை, இன்று காலை 9.34 மணியளவில் கெஜ்ரிவாலின் இல்லத்திலிருந்து தங்களுக்கு 2 முறை போன் அழைப்பு வந்ததாகவும் ஆனால், சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கு ஸ்வாதி இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் இதுதொடர்பாக தங்களுக்கு இன்னும் எழுத்துபூர்வமான எங்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த புகார் குறித்து விசாரித்து இன்னும் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள டெல்லி பாஜக, கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது நாட்டிலேயே இல்லாத ஸ்வாதி மீது தற்போது நடந்துள்ள தாக்குதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பஸ் நிலையத்தில் 100 மீட்டர் தொலைவில் இருந்த போலீஸ் சோதனைச்சாவடிக்கு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
    • அவர் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.

    மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள பரபரப்பான ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் அதிகாலையில் தனது சொந்த ஊருக்கு பஸ் ஏற 26 பெண் காத்திருந்தார்.

    அப்போது அவரிடம் பேச்சு கொடுத்த ஒருவர், வேறு இடத்தில பஸ் நிற்பதாக கூறி ஆளில்லாத பஸ்ஸில் ஏறச் செய்து பாலியல் வன்கொடுமை செய்து ஓடிவிட்டார். அவர் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.

    பஸ் நிலையத்தில் 100 மீட்டர் தொலைவில் இருந்த போலீஸ் சோதனைச்சாவடிக்கு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில ஆளும் பாஜக கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    குற்றவாளியின் பெயர் தத்தாத்ரேய ராமதாஸ் காடே (36 வயது) என்பதும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய அவர் கடந்த 2019 இல் சிறையில் இருந்து பெயிலில் வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே வன்கொஉடமை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி பஸ் நிலையத்தை அவர்கள் சூறையாடினார்கள்.

    இந்த நிலையில் அரசு பஸ்சுக்குள் இளம் பெண் வன்கொடுமை தொடர்பாக குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணைய தலைவி ரூபாலி ஷாகன்கர் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

     

    இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த சம்பவம் துரதிருஷ்ட வசமானது. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். குற்றவாளி 2 அல்லது 3 நாளில் பிடிபடுவார். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண்கள் கண்டிப்பாக தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும். இது குறித்து மகளிர் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே குற்றவாளி ராமதாஸ் காடே புகைப்படத்தை வெளியிட்டு அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்த அவசரக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ள அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சார்னிக், விரைந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று  தெரிவித்துள்ளார். 

    ×