என் மலர்
நீங்கள் தேடியது "womens cricket match"
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது.
- இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.
இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. அறிமுக வீராங்கனையான அமன்ஜோட் கவூர் 30 பந்தில் 41 ரன் எடுத்தார். யாஸ்திகா பாட்டியா 35 ரன்னும், தீப்தி சர்மா 33 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களே எடுத்து முடிந்தது. இதனால் இந்தியா 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், தேவிகா வைதியா 2 விக்கெட்டும், கைப்பற்றினர்.
இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.