என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Womens Day Celebration"
- பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.
- மகளிர் காவல் நிலைய போலீசார் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மகளிர் காவலர்கள் பங்கேற்று சினிமா பாடலுக்கு நடனமாடினர். மேலும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி மற்றும் பெண் காவலர்கள் சின்ன கவுண்டர் படத்தில் இடம் பெற்ற முத்துமணி மாலை பாடலை மேடையில் பாடி அசத்தினர். இதில் கோவில்பட்டி மேற்கு, கிழக்கு, நாலாட்டின்புதூர், கழுகுமலை, கயத்தார் காவல் நிலையங்களை சேர்ந்த பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.
- மகளிர் தின விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார்.
- சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு பேசினார்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கல்லூரி உள் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தீபாலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலர் டாக்டர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளருமான விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை தங்க செல்வி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆயிஷாள் பீவி நன்றி கூறினார். கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் டாக்டர் வேலையா, உதவிப் பேராசிரியர் தனலெட்சுமி, பேராசிரியர் சிவக்குமார் மற்றும் கல்லூரியின் ஏனைய பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.
- பெண்கள் ஒருங்கிணைந்து கேக் வெட்டி இனிப்பு வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் ஒருங்கிணைந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் லதா முன்னிலை வகித்தார்.
இதில் நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம், நகர மன்ற அவைத்தலைவர் துரை சீனிவாசன், நகராட்சி அலுவலர் மோகன், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், செந்தில்குமார், சாமுண்டீஸ்வரி,
கே.எம்.பி.பாபு, சங்கீதா, கங்காதரன், ரஷீதா, நந்தா தேவி, மல்லிகா, மற்றும் நகராட்சி அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பெண்கள் கலந்து கொண்டு விளையாடி பரிசுகளை பெற்றனர்
- கேக் வெட்டி வழங்கப்பட்டது.
திருப்பூர் :
உலகம் முழுக்க மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கே.எஸ்.சி., ஸ்கூல் ரோட்டில்உள்ள அந்த கட்சி அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிமுக கட்சியை சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள் உள்பட 300 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.. அதிமுக மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், திருப்பூர் தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன், லக்கி கார்னர், பலூன் உடைக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளையாடி பரிசுகளை பெற்றனர் . இந்த போட்டிகளை முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் நடத்தி வைத்தார். மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, ஹரிஹரசுதன், வேலுமணி, பாசறை சந்திரசேகர், யுவராஜ், வக்கீல் முருகேசன், எம்.ஜி.ஆர்., மன்ற தேவராஜ், மோட்டார் பாலு, மதுரபாரதி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
- தென்காசி மாவட்டத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது.
- கலெக்டரின் துணைவியார் ஹேமலதா கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமையில் கலெக்டர் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டரின் துணைவியார் ஹேமலதா கலந்துகொண்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவியப்போட்டி, கோல போட்டி, சமையல் போட்டி, பாடல் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற பணியாளர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மாதவன், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம் )ஷீலா,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, அலுவலக மேலாளர் ( பொது) .அரிகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பழனி நாடார் எம்.எல்.ஏ.
வீரகேரளம் புதூர் வட்டம், ஆர். நவநீத கிருஷ்ணபுரம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமையில் பழனிநாடார் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற உறுதிமொழியை பொதுமக்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
அரசு மருத்துவமனை
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ , உதவி உறைவிட மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .
மூத்த மருத்துவர் லதா , மருத்துவர் கீதா, செவிலியர் கண்காணிப்பாளர்கள் பிச்சைவடிவு , பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் சுவர்ணலதா வரவேற்புரை ஆற்றினார்.இணை இயக்குனர் பணியாளர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை ஆற்றினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார். மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மகளிரும் சேர்ந்து கேக் வெட்டி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.
மருத்துவமனையில் பணி புரியும் பணியாளர்கள் மூலம் பெண்கள் பற்றிய விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் கவிதைகளை வாசித்தனர். ஆலடி அருணா செவிலியர் பயிற்சி மற்றும் மருந்தாளுனர் பயிற்சி பெண்கள் நடனம் ஆடி விழாவை மகிழ்வித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் செவிலியர் கண்காணிப்பாளர் இராஜாத்தி ஜெகதா நன்றியுரை வழங்கினார் , இந்நிகழ்ச்சியினை செவிலியர் உமா மஹேஸ்வரி தொகுத்து வழங்கினார்.
கடையநல்லூர்
கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பிரேமலதா தலைமை தாங்கினார்.
கடையநல்லூர் அரசு தலைமை மருத்துவர் அனிதா பாலின் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தனுஷ் குமார் எம்.பி. , கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர், அப்பொழுது கர்ப்பிணி பெண்களுக்கு தாய் சேய் நல பெட்டகத்தை வழங்கினார். மாவட்ட சித்தர் மருத்துவ அலுவலர் உஷா,மருத்துவர்கள் மீனாட்சி, ராஜ்குமார், ஹரிஹரசுதன், மேனகா, சித்த மருத்துவமனை மருத்துவர் காஜா மொய்தீன், முகைனுத்தீன் சாருக் திமுக நகர செயலாளர் அப்பாஸ் நகர மன்ற உறுப்பினர் திவான் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் டாக்டர் கார்த்திக் அறிவுடைநம்பி நன்றி கூறினார்.
தென்காசி யூனியன் அலுவலகம்
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் மு.ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குழந்தைமணி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மு.கனகராஜ் முத்துப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் அன்பரசு வரவேற்று பேசினார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செ.குழந்தைமணி கேக் வெட்டினார். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.
மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.அன்பரசு, ரா.ராதிகா, இந்திரா, ராதாதிருமலை, அன்னத்தாய் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் முருகையா, வினிபா, ராஜ செல்வி, சங்கீதா, பாலமுருகன், பாலசுப்பிரமணியன் மற்றும் கணினி இயக்குனர்கள் கிருஷ்ணராஜா, தினகரன், சிவசுப்பிரமணியன், மரகதம், நந்தினி, இந்துமதி, கவுசல்யா, கனகலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளர் ராதிகா நன்றி கூறினார்.
- ஆறுமுகநேரி பேரூராட்சி மன்றத்தின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
- பேரூராட்சி தலைவரின் சார்பில் பெண் கவுன்சிலர்கள் அனைவருக்கும் தலா ரூ.3,500 மதிப்புள்ள புடவை பரிசாக வழங்கப்பட்டது
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பேரூராட்சி மன்றத்தின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அ.கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் தயாவதி வரவேற்று பேசினார். மகளிர் சாதனைகளும் சிறப்புகளும் என்ற தலைப்பில் அலுவலக பணியாளர் வரலட்சுமி சிறப்புரை ஆற்றினார்.
நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு போட்டிகளும் நடந்தன. பெண் வார்டு கவுன்சில ர்களின் சார்பில் பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரத்திற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவரின் சார்பில் பெண் கவுன்சிலர்கள் அனை வருக்கும் தலா ரூ.3,500 மதிப்புள்ள புடவை பரிசாக வழங்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பாக நடனமாடிய குரூஸ் நகர் பிச்சையம்மாள் (70) என்கிற மூதாட்டிக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் வார்டு கவுன்சிலர்கள் மாரியம்மாள், ரமா, புனிதா பெரியசாமி, புனிதா சேகர், ஜெயராணி, மரிய நிர்மலா தேவி, சகாயரமணி, சோ. வெங்க டேசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம்
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித மன்ற விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை தாங்கினார். கணிதத்துறை பேராசிரியர் புஷ்பராணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி பேராசிரியை ஆனந்த லெட்சுமி கணிதத்தின் மூலம் உலகைப் புரிந்து கொள்வது என்ற தலைப்பில் உரையாற்றினார். விழாவில் கணித மாதிரிகள் கண்காட்சி நடைபெற்றது. கணித மன்ற விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணிதவியல் துறை மூன்றாமாண்டு மாணவி முத்து சரஸ்வதி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கணிதத் துறை பேராசிரியர்கள் கீதா, தேன்மொழி, பிரேசில், பொன் செல்வகுமாரி, ஸ்டெபி ராஜ வின்செலஸ், ஜாபியா டினோ மெர்ஸி ஆகியோர் செய்திருந்தனர்.
சிவந்தி கல்லூரி
சிவந்தி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டா டப்பட்டது. கல்லூரி தாளாளர் சிவந்தி முருகேசன் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது . விழாவில் கல்லூரி முதல்வர் பாஸ்கர் ராஜ்பால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ். கலை கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ஜெயக்குமாரி கலந்து கொண்டு பெண்களுக்கு தேவை யானது தன்னம்பிக்கை என்பதை, கவிதை வாயிலாகவும் சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக அழகர் ஜுவல்லர்ஸ் ஆனந்தராஜ் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்ப டுத்தி பரிசுகளை வழங்கினார். சேதுபதி, சேது குற்றாலம், ராஜ்குமார், அரிஸ் டாட்டில், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
விழாவினை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் ஸ்டெல்லா மேரி மற்றும் ஒய்.ஆர்.சி. ஒருங்கிணை ப்பாளர் மலர்மாலை மற்றும் உறுப்பி னர்கள் நடத்தி னார்கள். மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் பல்டாக்டர் தி.ரேணுகா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். விலங்கியல்துறை பேராசிரியை வசுமதி, மகளிர் தினம் குறித்து பேசினார். இவ்விழாவில் பல்டாக்டர் தி.ரேணுகா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், பெண்கள் சாதனை படைத்து வாழ்வில் முன்னேறி நற்பெயரை பெற்றோருக்கு எடுத்து கொடுக்க வேண்டும். சமூகவலைதளத்தில் பல்வேறு அபாயங்கள் இருக்கிறது. இவற்றை கையாளும் போது பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும், என்றார். முன்னதாக மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தஜோதி வரவேற்று பேசினார். மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், முதுகலை மாணவிகள் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறை பேராசிரியை சாந்தி நன்றி கூறினார். தொடர்ந்து முதுகலை மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை முதுகலை மாணவிகள் செய்திருந்தனர்.
- பெண்களுக்கு தையல் எந்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம், பேனா, பென்சில் இலவசமாக வழங்கி வருகிறது.
திருப்பூர் :
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் தெற்கு ரதவீதி அரசு உயர்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் செயல்படும் அன்னை தெரசா மகளிர் தொண்டு நிறுவனத்தின் மகளிர் தின விழா பெருமாநல்லூரில் உள்ள லட்சுமி மகாலில் நடைபெற்றது. மகளிருக்கு கோலப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
விழாவில் 50 பெண்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான தையல் எந்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை தொண்டு நிறுவனத்தலைவர் மகாராணி வரவேற்றார். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு வக்கீல் எம்.நாகராஜன் பரிசுகள் வழங்கினார். அன்னை தெரசா தொண்டு நிறுவனத்துக்கு தாய் அறக்கட்டளை மற்றும் வின்டெக்ஸ் நிறுவன உரிமையாளர் நடராஜன் ரூ. 25 லட்சம் நன்கொடையாக வழங்கினார். விழாவில் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் சார்பில் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ரூ10. ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில் வேடசந்தூர் சுப்புலட்சுமி, சுபாஷ்சுதாகரன், விவசாயிகள் நலன் மற்றும் முன்னேற்ற கூட்டுறவு சங்க தலைவர் தீபா ராம்குமார், தஞ்சாவூரை சேர்ந்த பேச்சாளர்கள் சாந்தா நாகராஜன், வின்டெக்ஸ் நடராஜன், ஆடிட்டர் எம்.நரசிம்மன், என்.லலிதா ஆகியோர் பெண்களின் பெருமை பற்றியும், பலதுறைகளில் பெண்கள் படைத்த சாதனைகள் பற்றியும் பேசினர். தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மகாராணி கூறுகையில் "அன்னை தெரசா மகளிர் தொண்டு நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கடந்த 14 ஆண்டுகளாக ஏழை-எளியோருக்கு இலவச தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பல உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. மேலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம், பேனா, பென்சில் ஆகிய பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது" என்றார். முடிவில் சரஸ்வதி நன்றி கூறினார்.
- லதா நாராயணன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.
- தண்டையார்பேட்டை பாப்பாத்தி டிராவல்ஸ் வளாகத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் கல்பனா தலைமையில் நடக்கிறது.
திருவொற்றியூர்:
சமத்துவ மக்கள் கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா இன்று மாலை 5 மணிக்கு தண்டையார்பேட்டை பாப்பாத்தி டிராவல்ஸ் வளாகத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் கல்பனா தலைமையில் நடக்கிறது.
லதா நாராயணன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் ஜெயஸ்ரீ, எழுத்தாளர் லதா சரவணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்குகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை வட சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் குணசுந்தரி, மாநில நிர்வாகிகள் மீனா, ஆனந்தி, விஜயலட்சுமி, கல்யாணி, வர்ஷா, லெசி, அனிதா, ராஜ புஷ்பம், இளங்காவதி ஆகியோர் செய்துள்ளனர்.
- மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி மார்ச் 8-ம் தேதி பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற உள்ளது.
- பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலரும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.
கோயம்புத்தூர்:
குடும்ப ஆரோக்கியத்துடன் சேர்த்து வீட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி மார்ச் 8-ம் தேதி பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனை மகளிர்களுக்கு விருது வழங்கும் விழாவும் மேலும் இல்லத்தரசிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
குறிப்பாக, மாடித்தோட்ட பயிற்சியாளரும் தமிழ்நாடு பாரம்பரிய விதை சேகரிப்பு குழுவைச் சார்ந்தவருமான திருமதி. பிரியா ராஜ்நாராயணன், சிறுதானிய சமையல் மற்றும் சிறுதானிய உணவுப் பொருட்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திருமதி. மண்வாசனை மேனகா மற்றும் தேனீ வளர்ப்பில் பல்வேறு சாதனைகள் புரிந்து இந்திய மற்றும் தமிழக அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள திருமதி. ஜோஸ்பின் மேரி அவர்களும் நாட்டு மாடுகளை பேணிக் காத்து அதிலிருந்து நிலையான வருமானம் பெற முடியும் என்று சாதித்துக் காட்டிய முனைவர் திருமதி யமுனாதேவி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக வீட்டின் காய்கறி தேவையை வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம் எனும் தலைப்பிலும், சிறுதானியங்களை உண்டால் சிறுவர் போல் சுறுசுறுப்புடன் வாழலாம், ஆயுளைக் கூட்ட ஆளுக்கு ஒரு தேன் பெட்டி என்ற தலைப்பிலும் மற்றும் நலம் தரும் நாட்டு மாடுகளும் 20 வீட்டு உபயோகப் பொருட்களும் எனும் தலைப்புகளிலும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மேலும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது.
பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 9442590077, 83000 93777 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்