search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens T20 World Cup Match"

    • 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்தது.
    • இந்திய வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் அரை சதம் அடித்து (நாட்-அவுட்) 53 ரன்கள் எடுத்தார்.

    8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேப்டவுனில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

    இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஜவேரியா கான் 8 ரன்களும் ,முனீபா அலி 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த நிதாதர் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் இழந்தாலும் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அரைசதம் அடித்து அசத்தினார்.

    இதனால் 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்தது. பிஸ்மா மரூப் 68 ரன்களும், ஆயிஷா நசீம் 43 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 150 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

    இந்நிலையில், இந்திய அணி 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப்பெற்றது. இந்திய வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் அரை சதம் அடித்து (நாட்-அவுட்) 53 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா 33 ரன்களும், ரிச்சா கோஷ் 31 ரன்களும் (நாட் அவுட்), யாஸ்திக பாட்டியா 17 ரன்களும், கவுர் 16 ரன்களும் எடுத்தனர்.

    ×