என் மலர்
நீங்கள் தேடியது "workers killed"
- தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோதே இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.
- புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றி வருகின்றனர்.
தெலுங்கானாவில் கட்டுமானத்திலிருந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் நகரில் கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டடம், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோதே இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது குடித்து விட்டு 3 பேரும் வெளியே வந்தனர்.
- 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செட்டிப்பாளையம்,
கோவை மலுமச்ச ம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 39). தொழிலாளி. இவர் தனது நண்பர்களான தமிழ்செல்வன், ஞான பிரகாசம் ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.
மது குடித்து விட்டு 3 பேரும் வெளியே வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த காரில் வந்த 5 பேருக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் ஒரு மொபட்டில் சென்றனர். பின்னால் காரில் 5 பேரும் சென்றனர்.
அப்போது மொபட்டில் சென்றவர்கள் காருக்கு வழி விடாமல் சென்றனர். இதனைடுத்து காரில் சென்றவர்கள் ஹாரன் அடித்து முந்தி சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கினர். தாக்குதலில் தாக்குபிடிக்க முடியாமல் தமிழ்செல்வன், ஞான பிரகாசம் ஆகியோர் அங்கு இருந்து ஓட்டம் பிடித்தனர்
பிரபாகரன் மட்டும் சிக்கி கொண்டார். அவரை 5 பேர் கொண்ட கும்பல் தென்னை மட்டையால் தாக்கினர். பின்னர் பிரபாகரனை கீழே தள்ளி அங்கு இருந்த கல்லால் தலையில் தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பிரபாகரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செட்டி ப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 5 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா க்களில் 5 பேர் கொண்ட கும்பல் காரில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை கொண்டு போலீ சார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த 2 சிக்கினர். இவர்கள் தான் பேடிஎம் பயன்படுத்தி டாஸ்மாக் கடையில் மது வாங்கி இருக்கிறார்கள். அந்த விவரங்களை கொண்டு போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மற்ற 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
5 பேரும் சிக்கியதும் அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- காட்டுக்கொட்டாயை சேர்ந்த நடராஜன் கட்டிட தொழிலாளி.
- எதிர்பாராத விதமாக நடராஜன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே நெடுமானூர் கிராமம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் நடராஜன் (வயது43) கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜாத்தி (38). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நடராஜன், தனது வீட்டில் பழுதடைந்த மின்விசிறியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக நடராஜன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இரவில் பாலத்தின் மீதுள்ள நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். கார் டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #HaryanaAccident
சீனாவின் யுன்செங் கவுண்டியில் லாங்யுன் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஷிப்டில் 334 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் வடிகால் சுரங்கத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதும் சுரங்கத்தினுள் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சுரங்கம் இடிந்து விழுந்த பகுதியில் 22 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்புக்குழுவைச் சேர்ந்த 170 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்திருந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 18 பேரை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. அவர்களின் நிலை என்ன? என்பதும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்கு சீனாவில் ஏற்பட்ட சுரங்க வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #ChinaCoalMine #CoalMineCollapse