search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Workship"

    • மாரியம்மன் கோவில்களில் கடைசி ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் உள்ள மாகாளியம்மன், செல்லாண்டியம்மன், கண்ணபுரம் மாரியம்மன், எல்.கே.சி நகர். புற்றுக்கண் நாகாத்தாள், மயில்ரங்கம் திருமலை அம்மன், மாரியம்மன், உத்தமபாளையம் மாரியம்மன் கோவில்களில் நேற்று கடைசி ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன, ஆடிவெள்ளியையொட்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    வெள்ளகோவில் தர்மசாஸ்தா ஐயப்ப சாமி கோவிலில் கடைசி ஆடி வெள்ளியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    • குரும்ப கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வசிக்கின்றனர்.
    • குலதெய்மான வீரபத்திரசாமி கோவில் தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி, ஜெ.ஜெ.நகர், ஆண்டிப்பாளைம், தட்டான் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குரும்ப கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குலதெய்மான வீரபத்திரசாமி கோவில் தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத திருவிழா நேற்று காலை முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது.

    பின்னர் இரவு 7 மணி அளவில் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பூசாரி முனுசாமி காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தலையின் மீது தேங்காய் உடைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திகடன் செலுத்தி வழிப்பட்டனர். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் வீரபத்திரசாமி சரித்திர நாடகம் நடைபெற்றது. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தேங்காய் உடைக்கும் போது, தலையில் ரத்தமோ, வலியோ ஏற்படாது. இது போன்ற வினோத வழிபாடு மேற்கொள்ளும் போது வருடம் முழுவதும் உடல் நல கோளாறு ஏற்படாது எனவும், பஞ்சம் நீங்கி நாடு செழிப்படையும் என்பது ஐதீகம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • 16 வகை செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்கள் கடைப்பிடிக்கப்படக்கூடிய முக்கிய விரதமாகும்.
    • சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க, செல்வ வளம், உடல் ஆரோக்கியம், தாலி பாக்கியம் நிலைக்க விரதத்தை கடைபிடித்தனர்.

    திருப்பூர் :

    வரலட்சுமி விரதம், வர மகாலட்சுமி நோன்பு என குறிப்பிடப்படும் இந்த விரதம் ஒவ்வொரு ஆடி மாதம் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமைகளில் 16 வகை செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்கள் கடைப்பிடிக்கப்படக்கூடிய முக்கிய விரதமாகும். ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி பெரும்பாலும் கொண்டாடப்படும். ஆனால் இந்த 2022ல் கடைசி ஆடி வெள்ளி அன்று பௌர்ணமி திதி வந்துவிடுவதால், அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான இன்று 5-ந்தேதி (ஆடி 20) அன்று கடைப்பிடிக்கப்பட்டது.

    இதையொட்டி சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க, செல்வ வளம், உடல் ஆரோக்கியம், தாலி பாக்கியம் நிலைக்க விரதத்தை கடைபிடித்தனர்.இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து மகாலட்சுமியிடம் பூஜித்து, அதை சுமங்கலி பெண்கள் அணிந்து கொண்டனர். நல்ல வரன் அமைய கன்னிப் பெண்கள் இந்த விரதமிருந்து பூஜையில் கலந்து கொண்டனர். வரலட்சுமி விரதத்தையொட்டி வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி தீப வழிபாடு நடத்தினர். வாசனை புகையை இல்லம் முழுவதும் நிறைத்து, கலசம் வைத்து அதை மகாலட்சுமியாக நினைத்து வணங்கினர்.கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு இவற்றை இட்டு, கலசத்தை பட்டாடையால் அலங்கரித்து, அதன் மீது மாவிலைகளை வைத்தனர். ஒரு தேங்காய் மீது மஞ்சளால் தேவியின் முகத்தை வடித்து பூஜை செய்து வழிபட்டனர். தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன லட்சுமி தேவியின் உருவச்சிலையை வைத்தும் வழிபட்டனர்.

    தீபாராதனை செய்து, மகாலட்சுமிக்கு உகந்த இனிப்பு உள்ளிட்ட நைவேத்தியம் வைத்து படைத்தனர்.பூஜைகள், மந்திரங்கள் உச்சரித்து வழிபட்டு, கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவர் கையில் கட்டப்பட்டது.பின்னர் படைக்கப்பட்ட நைவேத்திய பொருட்களுடன், தாம்பூலம், மஞ்சள் புடவை போன்றவற்றை சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுத்து ஆசி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு வீடுகளில் இந்த வரலட்சுமி விரத வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    புராண கதாபாத்திரங்கள் :

    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம். சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    ஏகலைவன் :


    மகாபாரதத்தில் வேடுவர்களின் தலைவனாக இருந்தவர் ஹிரனியதனுஷ். இவரது மகன் தான் ஏகலைவன். இவன் குரு பக்திக்கு சிறந்த உதாரணமாக சொல்லப்படுகிறான். வேடவர் குலத்தில் பிறந்த ஏகலைவனுக்கு, குருவில் சிறந்தவரான துரோணரிடம் வில்வித்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனுக்கு வில்வித்தை கற்றுத்தர துரோணர் மறுத்து விடுகிறார். இதனால் துரோணரின் உருவ சிலையை செய்து, அவரை மானசீக குருவாக ஏற்று வில்வித்தை பயில்கிறான், ஏகலைவன். அதன் மூலம் வில்வித்தையில் சிறந்தவராக மகாபாரதம் குறிப்பிடும் அர்ச்சுனனைவிட சிறப்பானவனாக திகழ்கிறான். இதனை அறிந்த அர்ச்சுனன், அதுபற்றி துரோணரிடம் கூறுகிறான்.

    துரோணரோ, ஏகலைவனை அழைத்து, குரு தட்சணையாக அவனது வலது கை கட்டைவிரலைக் கேட்கிறார். சற்றும் யோசிக்காத ஏகலைவன், தன் குருவிற்காக தன் கட்டை விரலையே காணிக்கையாக செலுத்தி, குரு பக்தியில் சிறந்து விளங்கினான் என்கிறது மகாபாரதக் கதை.

    காந்தாரி :


    அஸ்தினாபுரத்து அரசன் திருதிராஷ்டிரரின் மனைவி தான் காந்தாரி. கவுரவர்கள் என்று அழைக்கப்பட்ட துரியோதனன் முதலான 100 பேரையும் பெற்றெடுத்தவள் காந்தாரி. திருதிராஷ்டிரர் பார்வையற்றவர் என்பதால், காந்தாரியும் கணவரின் இருள் உலக துயரை பகிர்ந்து கொள்வதற்காக, மணம் முடிந்த காலம் முதல் தன் கண்களை துணியால் கட்டிக்கொண்டாள். தன் பிள்ளைகள், தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தியவள்.



    சனுரா :

    மதுராபுரியை ஆண்டு வந்தவன் கம்சன். இவன் கிருஷ்ணரை பெற்றெடுத்த தேவகியின் சகோதரன். தங்கையின் மகனால் தன் உயிருக்கு ஆபத்து என்று அறிந்த கம்சன், கிருஷ்ணரைக் கொல்ல பலவித முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. அதனால் கோகுலத்தில் இருந்த கிருஷ்ணரை, மதுராபுரிக்கு அழைத்து மல்யுத்தம் செய்து கொல்ல முடிவு செய்தான், கம்சன். கிருஷ்ணரையும், பலராமரையும் மல்யுத்தம் புரிந்து கொல்வதற்காக நியமிக்கப்பட்டவன் தான் சனுரா. இவனுக்கு முஷ்டிகன் என்ற சகோதரன் உண்டு. இருவரும் மாபெரும் மல்யுத்த வீரர்கள். ஒரு அரங்கத்தில் சனுரா கிருஷ்ணரிடம் சவால் விட, அந்த ஆபத்தான சண்டையில் கிருஷ்ணர் சனுரானையும், பலராமர் முஷ்டிகனையும் வீழ்த்தினார்.

    பகீரதன் :

    பகீரதன் சூரிய வம்சத்து அரசர். இவர்தான் கங்கையை ஆகாயத்தில் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வந்தவர் என்று புராணங்கள் சொல்கின்றன. இவர் தனது முன்னோர் மோட்சம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கான வழியைத் தேடினார். அதற்கு ஆகாயத்தில் இருக்கும் கங்கையை, பூமிக்கு கொண்டு வந்து சிவபெருமானை அபிஷேகித்து பூஜிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதனால் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வர கடுமையாக தவம் இருந்தார். இதையடுத்து சிவபெருமானின் அருளால் கங்கை, பூமியை வந்தடைந்தது. அதன் மூலம் பகீரதனின் முன்னோர்கள் முக்தி அடைந்தனர். கங்கையை பூமிக்குக் கொண்டு வர பகீரத பிரயத்தனம் செய்த காரணத்தால்தான் அவரது பெயர் ‘பகீரதன்’ என்று ஆனது.

    சிந்தாமணி :

    அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றில் ஒன்று தான் சிந்தாமணி என்ற ஒருவகை கல். அந்த அற்புதக் கல்லை, சிறந்த முனிவராக திகழ்ந்த கபில முனிவரிடம் அளித்தனர். அந்த முனிவர் சிந்தாமணி கல்லை, இளவரசர் கனராஜனுக்கு ஆடம்பர விருந்து அளிப்பதற்கு உபயோகித்தார். சிந்தாமணி செய்யும் அற்புதத்தை கண்டு வியந்த இளவரசன், அதை அபகரித்து சென்று விட்டான். எனவே அந்த கல்லை மீட்டு தருமாறு விநாயகப்பெருமானிடம் முனிவர் வேண்டினார். அவர் இளவரசனுடன் போரிட்டு, சிந்தாமணி கல்லை மீட்டார்.

    ×