என் மலர்
முகப்பு » World Elephant Day Celebration at
நீங்கள் தேடியது "World Elephant Day Celebration at"
- மசினகுடியில் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு பேரணியும் நடந்தது.
- யானைகள் பற்றிய கையேடும், துணிப்பையும் வழங்கப்பட்டன.
ஊட்டி
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷின் உத்தரவின்படி, மசினகுடி கோட்ட துணை இயக்குநா் அருண்குமாா் முன்னிலையில் மசினகுடியில் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு பேரணியும் நடந்தது.
அதனை தொடா்ந்து தெப்பக்காடு யானைகள் முகாமில் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றன. தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகள் பற்றி வனக்கால்நடை உதவி மருத்துவா் ராஜேஷ், யானை ஆராய்ச்சியாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் பள்ளிக் குழந்தைகளுக்கு விளக்க உரை அளித்தனா். பின்னா் யானைகள் வழித்தடம் மற்றும் பாதுகாப்பு பற்றி குறும்படம் காண்பிக்கப்பட்டது. வி
ழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு யானைகள் பற்றிய கையேடும், துணிப்பையும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியரோடு, திரளான பொதுமக்களும், தன்னாா்வலா்களும் கலந்து கொண்டனா்.
×
X